ஹீத் ஸ்ட்ரீக் உயிருடன் இருக்கிறார்: ஹென்றி ஒலாங்கா

Published On:

| By Jegadeesh

ஹீத் ஸ்ட்ரீக் இறந்ததாக பரவும் செய்தி தவறானது என ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதனிடையே அவர் மரணமடைந்ததாக எண்ணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக், வாசிம் ஜாபர் மற்றும் அஸ்வின் உள்ளிட்டோர் ஹீத் ஸ்ட்ரீக் குடும்பத்தினருக்கு ஆறுதல் செய்தியை சமூக வலைதள பக்கமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டனர்.

இந்நிலையில் ஹீத் ஸ்ட்ரீக் மரணம் அடையவில்லை என ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா தெரிவித்துள்ளார்.

https://twitter.com/henryolonga/status/1694212344732357101?s=20

இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 23) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நான் அவரிடம் தான் கேட்டேன்அவர் உயிருடன் இருக்கிறார் மக்களே.”என்று கூறியுள்ளார்.

யார் இந்த ஹீத் ஸ்ட்ரீக்?

கத்துக்குட்டியாக இருந்த ஜிம்பாவே அணியை, உலகில் உள்ள டாப் டென் அணிகளுடன்  போராடும் அளவிற்கு வார்த்தெடுத்தவர் ஹீத் ஸ்ட்ரீக். ஜிம்பாவே அணியின் கேப்டனாக இவருடைய பங்கு மிக முக்கியமானது.

அது மட்டுமின்றி ஒரு சிறந்த பந்து வீச்சாளராகவும், சிறந்த பேட்ஸ்மனாகவும் இவர் அந்த அணிக்கு தன்னுடைய பங்களிப்பை அளித்துள்ளார்.

65 டெஸ்ட், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள்,  ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜிம்பாப்வேயின் ஒரே வீரராக ஸ்ட்ரீக் இன்றுவரை இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சீட் வழங்காததால் கதறி அழுத முன்னாள் துணை முதல்வர்: வைரல் வீடியோ!

திமுக அமைச்சர்கள் வழக்கின் தீர்ப்பு என்னை தூங்கவிடவில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel