சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு இன்று (மார்ச் 23) ரூபாய் 120 குறைந்து ரூ.49,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 15 குறைந்து ரூ.6,185-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூபாய் 53,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 17 குறைந்து ரூ.6,747-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் 1 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 81,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரேயடியாக உயர்ந்து ரூபாய் 5௦,௦௦௦ எட்டிப் பிடித்த தங்கம் தற்போது லேசாக விலை குறைந்துள்ளது. வெள்ளியும் கிராமிற்கு 5௦ பைசா குறைந்துள்ளது.
தங்கம் விலை இறக்கத்தினை பார்க்கும்போது பெயருக்கு லேசாக குறைந்துள்ளதே தவிர, எதிர்பார்த்த அளவிற்கு விலை குறையவில்லை.
எனவே இன்னும் நன்றாக விலை இறங்கும்வரை சற்றுப்பொறுத்து தங்க நகைகள் வாங்குவது நல்லது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறையுமா? காத்திருப்போம்!
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தன் மீது வழக்குப்பதிவு
நடைபயிற்சியில் வாக்கு சேகரித்த ஸ்டாலின்
மாஸ்கோ பயங்கரம் : துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் பலி… பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ்!