’இந்த வீரரால் இந்திய தேர்வுக்குழுவுக்கு பெரும் தலைவலி’: கவாஸ்கர்

விளையாட்டு

இந்திய வீரர் ஷிவம் துபேவின் எழுச்சி இந்திய தேர்வுக்கு பெரும் தலைவலியை அளிப்பதாக என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி கடந்த 11, 14ஆம் தேதிகளில் நடந்த முதல் 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வென்று  2-0 என்று முன்னிலையுடன் தொடரை கைப்பற்றி உள்ளது.

இந்த இரண்டு போட்டிகளிலும் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் ஷிவம் துபே. மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 5 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 40 பந்துகளில் 60 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 5 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 32 பந்துகளில் 63 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற செய்தார். இரண்டு போட்டியிலும் அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியா இருந்தாலும் ஷிவம் துபே இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிரிக்பஸ் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,  “ஷிவம் துபே இதுபோன்ற ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினால், அவரை யாரும் கைவிட முடியாது. இது அணித் தேர்வின் போது தேர்வாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். துபே ஒரு சர்வதேச வீரராக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்.

சொந்த மண்ணில் நடந்த இரண்டு போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், சக வீரர்களின் பாராட்டுகளையும் மரியாதையையும் பெற்றுள்ளார். முன்பு யுவராஜுடன் அவர் ஒப்பிடப்பட்ட நிலையில், இப்போது யாரையும் நகலெடுக்க முயற்சிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

இருவரும் ஆல்ரவுண்டர்கள் என்ற ரீதியில் துபேவுக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பதில் கடும் போட்டி நிலவும் என்ற கருத்து நிலவுகிறது.

துபே இதே ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தும் பட்சத்தில் அவரை தேர்வுக்குழு கைவிட முடியாது. ஹர்திக் பாண்டியா ஃபிட்டானவராக இருந்தாலும் அவர் டி20 உலகக்கோப்பை அணியில் இருப்பதை அவர் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
எனவே இருவரும் வரும் ஐபிஎல் தொடரில் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களிடம் உலகக்கோப்பை அணியில் அவர்களின் இடம் உறுதி செய்யப்படும். அந்தவகையில் ஐபில் தொடர் முக்கியமானது” என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா
>இரு வேடங்களில் மிரட்டும் சூர்யா… கங்குவா புது போஸ்டர் இதோ!

நயன் – விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ஜல்லிக்கட்டு ஆவணப்படம்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0