IPL 2024: 454 நாட்களுக்கு பிறகு ‘கேப்டனாக’ களமிறங்கும் ரிஷப் பண்ட்…சறுக்குவாரா? சாதிப்பாரா?

சிறப்புக் கட்டுரை விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட வளர்ந்துவரும் இளம் நட்சத்திரமான ரிஷப் பண்ட், யாரும் எதிர்பாராத விதமாக, கடந்த 2022 டிசம்பரில் ஒரு கோர விபத்தில் சிக்கினார்.

2022 டிசம்பர் 30 அன்று அதிகாலை, டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான ரூர்கிக்கு காரில் சென்றுகொண்டிருந்த போது, பண்ட் இந்த விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில், ரிஷப் பண்ட்டிற்கு தலை, கால், முதுகு என பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட உடனேயே, பண்ட் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்க, உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருந்து வெளிவந்த பண்ட், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அறுவைசிகிச்சை 

எய்ம்ஸ் ரிஷிகேஷ் மருத்துவமனையில், பண்ட்டிற்கு தேவையான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்து குறித்து அண்மையில் பேசிய ரிஷப் பண்ட், “எனது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. எலும்பு விலகியிருந்தது.

காயம் இன்னும் சற்று தீவிரம் அடைந்திருந்தாலோ அல்லது நரம்பை பாதித்திருந்தாலோ, என்னுடைய காலையே அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்”, என தெரிவித்திருந்தார்.

சுற்றி நின்று ஊரே பார்க்க… ஜாலியாக ஆடிய கோலி… என்ன பாட்டுக்குன்னு பாருங்க!

அறுவை சிகிச்சைகளுக்கு பின், பண்ட் காயத்தில் இருந்து மீள 6 மாதங்கள் வரை தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனால், முழு நேர ஓய்வில் இருந்த ரிஷப் பண்ட், தனது ஓயாத போராட்டத்தினால் நடக்க துவங்கினார். அந்த போராட்டத்தினால், நடைப்பயிற்சியில் துவங்கிய பண்ட்டின் மீள்ச்சி பயணம், கிரிக்கெட் பயிற்சியை எட்டியது.

உழைப்பு

அவரது அயராத உழைப்பினால், பண்ட் மீண்டும் கிரிக்கெட் விளையாட முழு உடற்தகுதி பெற்றதாக பிசிசிஐ சான்று வழங்கியது. இதை தொடர்ந்து, 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டார்.

CSK vs RCB: ‘ஆடாம ஜெயிச்சோமடா’… முதல் போட்டியில் தோனி படைத்த சாதனைகள்

இந்த ஒரு விபத்தின் காரணமாக, 2023 உலகக்கோப்பை உட்பட பல முக்கிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பண்ட், சுமார் 15 மாதங்கள் சரியாக 454 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்க உள்ளார்.

2024 ஐபிஎல் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 2-வது போட்டியில், மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இன்று (மார்ச் 23) களம் காண்கிறார், ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட்டின் ஐபிஎல் பயணம்

26 வயதேயான ரிஷப் பண்ட் இதுவரை கிரிக்கெட் உலகில் படைத்த சாதனைகள் ஏராளம்.

சாதனைகளை கடந்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பல எண்ணற்ற மறக்கமுடியா தருணங்களை அவர் பரிசாக வழங்கியுள்ளதே, அவரின் மீது ரசிகர்கள் வைத்துள்ள இவ்வளவு எதிர்பார்ப்புக்கும் காரணம்.

சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி, ஐபிஎல் தொடரிலும் ரிஷப் பண்ட் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பெற்றுள்ளார். ஆக்ரோஷமான அதிரடி ஆட்டக்காரராக அறியப்படும் ரிஷப் பண்ட், 2016 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அறிமுகமானார்.

IPL 2024: ஒரே இந்திய வீரர்… ‘கிங்’ கோலி படைத்த புதிய சாதனை!

அந்த தொடரில் தான் அறிமுகமான 3-வது போட்டியிலேயே, குஜராத் அணிக்கு எதிராக 40 பந்துகளில் 69 ரன்கள் விளாசி டெல்லி அணிக்கு ஒரு அபார வெற்றியை பெற்றுத்தந்தார்.

இவரின் இந்த அதிரடி ஆட்டம் 2018 ஆம் ஆண்டு உச்சம் பெற்றது. அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், 1 சதம் மற்றும் 5 அரைசதங்கள் உட்பட தான் விளையாடிய 14 போட்டிகளில் 684 ரன்களை குவித்தார்.

இளம்வீரர்

அதுமட்டுமின்றி, அந்த ஆண்டுக்கான வளர்ந்துவரும் இளம் வீரருக்கான விருதையும் பண்ட் வென்றார்.

2021 ஐபிஎல் தொடரின்போது, டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார்.

இதை தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் பொறுப்பு அப்போது 23 வயதாக இருந்த ரிஷப் பண்ட்டிற்கு வழங்கப்பட்டது. அந்த தொடரில், டெல்லி அணி பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியது.

ஐபிஎல் தொடரில், இதுவரை 98 போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட், 2838 ரன்களை விளாசியுள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 147.97 ஆக உள்ளது.

விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுவந்த ரிஷப் பண்ட், இதுவரை 64 கேட்சுகளை பிடித்து, 18 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார்.

இந்நிலையில், மிக நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ரிஷப் பண்ட், தனது அதிரடி ஆட்டத்தை தொடர்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிறைந்துள்ளது.

ரிஷப் பண்ட் என்ன செய்யப் போகிறார் என காத்திருந்து பார்ப்போம்!

மகிழ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜக 4% தான்… போட்டி திமுக, அதிமுகவுக்கு இடையிலதான்! – எஸ்.பி. வேலுமணி

“பாஜகவினரை வெறுத்துவிடாதீர்கள்”- கெஜ்ரிவால் அனுப்பிய செய்தியை வெளியிட்ட மனைவி சுனிதா

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *