சுற்றி நின்று ஊரே பார்க்க… ஜாலியாக ஆடிய கோலி… என்ன பாட்டுக்குன்னு பாருங்க!

விளையாட்டு

நேற்று (மார்ச் 22) நடைபெற்ற சென்னை – பெங்களூரு இடையிலான ஐபிஎல் போட்டி தான் சமூக வலைதளங்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.

எதிர்பார்த்தது போல முதல் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி, சென்னை அணி முதல் வெற்றியை ருதுராஜ் தலைமையில் பெற்றுள்ளது.

வழக்கம்போல சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவி, ரசிகர்களுக்கு மீண்டுமொரு வருத்தத்தினை பரிசளித்துள்ளது.

நேற்றைய போட்டியை பொறுத்தமட்டில் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக பெங்களூரு அணி 200 ரன்களை கடந்திருக்கும்.

அதோடு 5 விக்கெட் வீழ்ந்த பிறகும் நல்ல ஒரு பார்ட்னர்ஷிப்பை பெங்களூரு அணி உருவாக்கி ரன்கள் குவித்தது. இதனால் அடுத்த போட்டியில் கண்டிப்பாக வீறுகொண்டு எழுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2024: ஒரே இந்திய வீரர்… ‘கிங்’ கோலி படைத்த புதிய சாதனை!

இந்த ஐபிஎல் போட்டி வழியாக கோலி 12 ஆயிரம் ரன்களை கடந்தது தான், தற்போது பெங்களூரு அணிக்கு இருக்கும் ஒரே ஆறுதல். மகளிரணி கோப்பை வென்றுள்ளதால் கண்டிப்பாக ஆடவர் அணியும் இந்தமுறை கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு நடுவில் சேப்பாக்கம் மைதானத்தில், கோலி டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போட்டி முடிந்த பின்னர் இரு அணியின் வீரர்களும் மைதானத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது விஜய்-திரிஷா நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் இருந்து ‘அப்படி போடு’ பாடல் ஒலிபரப்பானது.

இந்த பாட்டைக் கேட்ட கோலி ஜாலியாக ஸ்டெப்ஸ் போட்டு க்யூட்டாக டான்ஸ் ஆடினார். இதைப்பார்த்த ரசிகர்கள் ”இது நல்லா இருக்கே”, ”கள்ளம் கபடம் இல்லாத மனுஷன்பா” என கோலியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்!

ராகுல் சிபாரிசு செஞ்சும் நடக்கலையா? காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது?

”இசையில் குறுகிய அரசியலைக் கலக்காதீர்கள்” : டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஸ்டாலின் ஆதரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *