டிராவிட் வேண்டாம்: பயிற்சியாளரில் மாற்றம் வேண்டும்…ஹர்பஜன் சிங் கோரிக்கை!

விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரிக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்.

இவர் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மாவுடன் இணைந்து இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

ஆனால் , ஒவ்வொரு தொடரிலும் தரமான வீரர்களை கண்டறிகிறோம் என்ற பெயரில் அணியில் மாற்றங்களை நிகழ்த்துவதை டிராவிட் வழக்கமாக வைத்துள்ளார்.

அதேநேரம் குல்தீப் யாதவ் போன்ற தரமான வீரர்களை பெஞ்சில் அமர வைப்பது, சுப்மன் கில் போன்ற ஃபார்மில் இருக்கும் இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்க மறுப்பது, ஒரு வருடத்திற்கு மேலாக சுமாராக செயல்பட்டும் கே.எல். ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது போன்ற அவரது செயல்பாடுகள் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்து வருகிறது.

இதனிடையே, டிராவிட் மீது கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களின் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 50 ஓவர் (2019) மற்றும் 20 ஓவர் (2022) ஆகிய உலகக் கோப்பைகளை ஒரே நேரத்தில் வென்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியான அணுகு முறையில் மிரட்டி வரும் இங்கிலாந்தின் வெற்றி நடைக்கு ’ப்ரெண்டன் மெக்கல்லம்’ உள்ளிட்ட 2 வெவ்வேறு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Change in Coach Harbhajan Singh Demands

அந்த வகையில் இந்தியாவில் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரராக டிராவிட் போற்றப்பட்டாலும் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் ஐடியா இல்லாத அவருக்கு பதிலாக விரேந்தர் சேவாக் அல்லது ஆஷிஷ் நெஹ்ரா போன்ற டி20 ஸ்பெஷலிஸ்ட் முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸின் ஐடியா எக்ஸ்சேஞ்ச் அமர்வின் போது பேசிய ஹர்பஜன் சிங் ” இந்திய அணியில் 2 வெவ்வேறு கேப்டன்கள் இருக்கும் போது 2 வெவ்வேறு பயிற்சியாளர்கள் ஏன் இருக்கக் கூடாது? அதில் ஒருவர் வித்தியாசமாக திட்டம் போடுபவராக இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக இங்கிலாந்து அணியில் ப்ரெண்டன் மெக்கல்லம் இருப்பது போல் வீரேந்திர சேவாக் அல்லது ஐபிஎல் தொடரில் முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து கோப்பையை வென்ற ஆசிஷ் நெஹ்ரா போன்றவர் இருக்க வேண்டும். அதாவது யாராக இருந்தாலும் டி20 கிரிக்கெட்டை பற்றி நன்கு புரிந்து அதற்கு தேவையான அம்சங்களை தெரிந்து கொண்டவர்களை இந்திய அணிக்குள் கொண்டு வாருங்கள்” என்றார்.

Change in Coach Harbhajan Singh Demands

தொடர்ந்து பேசிய ஹர்பஜன் சிங் “அந்த பயிற்சியாளருக்கு டி20 கிரிக்கெட்டில் முழுமையான கவனம் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஆசிஸ் நெஹ்ரா டி20 பயிற்சியாளராக இருக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் எப்படி இந்தியாவை உலக சாம்பியனாக மாற்ற முடியும் என்பது பற்றி அவருக்கு ஓரளவு தெரியும்.

அதே போல் ராகுல் டிராவிட் இந்தியாவை எப்படி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக மாற்ற முடியும் என்பதை பற்றி தெரிந்திருப்பார். எனவே இந்த விஷயத்தில் நாம் சற்று அதிகமான ஆர்வத்தை காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், “ டி20 கிரிக்கெட்டில் நீங்கள் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு உண்டான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. ஒருநாள் கிரிக்கெட்டில் டெஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடாது. நாம் 2 – 3 வீரர்களை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் சாம்பியன்ஷிப் வெல்ல முடியாது.

மாறாக ஒரே சமயத்தில் 8 – 9 வீரர்கள் அசத்தினால் மட்டுமே உலகக் கோப்பையை வெல்ல முடியும். ஓரிரு வீரர்கள் உங்களுக்கு சாதாரண போட்டி வென்று கொடுப்பார்கள். ஆனால் ஒரு சிறந்த அணி தான் உங்களுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுக்கும்” என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டெல்லி சிபிஐ அலுவலக பகுதியில் 144 தடை உத்தரவு!

கல்வி நிறுவனங்களில் ‘சாதி’ தற்கொலைகள் : சந்திரசூட் வேதனை

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *