“ட்ரோல்களை பார்த்து சிரிப்பு தான் வந்தது” : பெற்றோரிடம் பகிர்ந்த அர்ஷ்தீப்

விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கியமான கேட்சை தவறவிட்ட அர்ஷ்தீப் சிங் ரசிகர்களின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்.

இந்நிலையில் தனக்கு எதிராக சமூகவலைதளங்களில் பகிரப்படும் ட்ரோல்களை பார்த்து சிரித்ததாக அர்ஷ்தீப் சிங் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் எப்போதும் அனல் தெறிக்கும். களத்தில் வீரர்கள் மட்டுமின்றி இணையதளத்தில் இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் அதே அனல் பறக்கும்.

இதில் வெற்றி பெறும் நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் தங்கள் அணிவீரர்களை கொண்டாடும் அதே வேளையில், தோற்ற நாட்டினை சேர்ந்த ரசிகர்கள், சொந்த அணி வீரர்களை இணையத்தில் வறுத்தெடுத்து விடுவார்கள். இந்நிலைமை இந்தியா பாகிஸ்தான் இடையே பலகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் கடந்த 4ஆம் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா சூப்பர் 4 சுற்றில் மோதியது. இந்த போட்டியில் வென்றால் எளிதாக இறுதிப்போட்டியை அடையலாம் என்று இரு நாட்டைச் சேர்ந்த வீரர்களும் கடுமையாக போராடினார்.

இந்திய அணி சிறப்பாக விளையாடிய போதும், 18ஆவது ஓவரில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி கொடுத்த எளிதான கேட்சை இளம் வீரர் அர்ஸ்தீப் சிங் தவறவிட்டுவிட்டார். தொடர்ந்து அடுத்த ஓவரில் ஆசிப் ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடிக்கவே, ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது.

i laugh towards my trolls

இந்த போட்டியில் இந்தியா தோற்றதற்கு பல காரணங்கள் இருந்தும், முக்கியமான கட்டத்தில் அர்ஸ்தீப் சிங் தவறவிட்ட கேட்ச் மட்டும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ரசிகர்கள் பலரும் அர்ஷ் தீப்புக்கு எதிராக கடும் ட்ரோல்களை பதிவிட்டனர்.

அதற்கெல்லாம் மேலாக விக்கிப்பீடியா பக்கத்தில், அர்ஷ்திப் காலிஸ்தான் பகுதியைச் சேர்ந்த பிரிவினைவாதி என்று மர்மநபரால் குறிப்பிடப்பட்டார். எனினும் 15 நிமிட இடைவெளியில் இந்த பதிவுகள் பின்னர் மாற்றி சரிசெய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில், போலியான செய்தி எப்படி பகிர முடிந்தது என்பதற்கு பதிலளிக்கும்படி விக்கிப்பீடியா அதிகாரிகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் நேற்று சம்மன் அனுப்பியது.

ட்ரோல்களை பார்த்த சிரித்தேன்!

இதற்கிடையே விளையாட்டு வீரர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்ளும் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் விளையாட உள்ளார்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 6) அவரது தந்தை தர்ஷன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அர்ஷ்தீப் என்ன மனநிலையில் உள்ளார் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.

அதற்கு தர்ஷன் கூறுகையில், ”தனக்கு எதிராக வந்த ட்ரோல் பதிவுகளை பார்த்து சிரிப்பு தான் வந்தது என அர்ஷ்தீப் எங்களிடம் கூறினார். மேலும், நான் இவற்றில் இருந்து நேர்மறையானவற்றை மட்டுமே எடுக்கப் போகிறேன். இந்த சம்பவம் எனக்கு அதிக நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று அர்ஷ்தீப் தெரிவித்தார்” என்றார்.

i laugh towards my trolls

அர்ஸ்தீப்புக்கு ஆதரவாக இந்திய அணி!

’ட்ரோல் பதிவுகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த தர்ஷன், “ஒரு பெற்றோராக, இந்த ட்ரோல்கள், விமர்சனங்களால் நாங்கள் மிகவும் மோசமாக உணர்ந்தோம்.

அர்ஷ்திப் சிங்குக்கு தற்போது 23 வயது தான் ஆகிறது. ட்ரோல்களைப் பற்றி நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. சமூகவலைதளங்களில் நாம் எல்லோருடைய வாயையும் மூட முடியாது. ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு இல்லை. அவர்களால் தோல்வியை தாங்கி கொள்ள முடியாது.

ஆனால் இது விளையாட்டு, நாள் முடிவில் ஒருவரால் அல்ல, அணியால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக முழு இந்திய அணியும் உண்மையில் இளம் வீரருக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

இன்று இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணி களமிறங்குகிறது. இந்நிலையில், தான் செய்த தவறுக்கு, இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆசிய கோப்பை : வரலாற்று வெற்றியை பெறுமா இந்தியா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *