CSK vs MI: முக்கிய வீரர் காயத்தால் அவதி… என்ன செய்யப்போகிறது சென்னை?

Published On:

| By Manjula

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை-மும்பை இடையிலான ஐபிஎல் போட்டி, மும்பை வான்கடேவில் தற்போது நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். மும்பையின் சொந்த மைதானம் வான்கடே என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

சென்னை அணியை பொறுத்தவரை பதிரனா காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். எனவே இது சென்னைக்கு பின்னடைவாக இருக்கலாம்.

ஓபனிங் வீரர்களாக ரஹானே-ரச்சின் களமிறங்கிய நிலையில், கோட்ஸி பந்தில் ரஹானே 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.

இதையடுத்து வழக்கமாக ஓபனிங் இறங்கும் கேப்டன் ருத்துராஜ் இன்று ஒன் டவுன் இறங்கி உள்ளார். நன்றாக ஆடிவந்த ரச்சின் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க சிவம் துபே (2) தற்போது ருத்துராஜ் (32) உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து உள்ளார்.

ரஹானே, ரச்சின் என அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்ததால், சென்னை அணி லேசாகத் தடுமாறி வருகிறது.

சென்னை அணி வீரர்கள் விவரம்:

ருத்துராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரஹானே, சிவம் துபே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, மஹேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாகூர், முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே.

இம்பாக்ட் பிளேயராக மஹீஸ் தீக்ஷனா இறங்க வாய்ப்புகள் உள்ளன.

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் விவரம்:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, திலக் வர்மா, மொஹம்மது நபி, ரோமரியோ ஷெப்பர்ட், டிம் டேவிட், ஸ்ரேயாஸ் கோபால், ஆகாஷ் மத்வால், பும்ரா, கோட்ஸி.

இம்பாக்ட் பிளேயராக சூர்யகுமார் யாதவ் இறங்கலாம் என தெரிகிறது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Whistle Podu: தளபதியின் தமிழ் புத்தாண்டு ட்ரீட்… படத்தின் கதை இதுதானா?

IPL 2024: காயத்தை ‘மறைத்து’ விளையாடும் ஹர்திக் பாண்டியா?

CSK vs MI: தொட்டதெல்லாம் ‘தூள்’ பறக்குது… ‘மீம்ஸ்’களால் மோதிக்கொள்ளும் ரசிகர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share