தற்போது ஆடவருக்கான டி 20 உலகக்கோப்பைக்கான ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக ஐபிஎல் ஏலத்திற்கான பேச்சுக்கள் ஆரம்பித்திருக்கிறது.
2007 ஆம் ஆண்டு பிசிசிஐ-யால் ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடரானது ஆண்டுக்கொரு முறை விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் அணியில் தற்போது 10 அணிகள் இருக்கின்றனர்.
இந்த 10 அணிகளும் ஏலத்தில் பங்கேற்கும். முதலில் மினி ஏலம் இருக்கும். அதாவது ஏற்கனவே இருக்கும் அணி வீரர்கள் யார் யாரை விடுவிக்க இருக்கிறார்கள், புதிதாக யாரை எடுக்க இருக்கிறார்கள் என விலாவரியாய் பேசி முடிவெடுப்பதே மினி ஏலம்.
உத்தேசமாக இந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற இருக்கும் மினி ஏலத்தில் எந்தெந்த அணிகள் எவ்வளவு ரூபாய்க்கு எடுக்கப்படுவார்கள் என்பதைப் பற்றிய பேச்சு அதிகமாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் கூடுதலாய் 5 கோடி ரூபாய் செலவழிக்க இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
தற்போது அணிகளின் கையில் கைவசம் இருக்கும் பணத்தின் அளவைப் பற்றிப் பார்க்கலாம்.
இந்த நிலையில் ஐபிஎல் அணிகளில் இருக்கும் மொத்தம் 10 அணிகளில் , முதலில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியானது 8 கோடி ரூபாய் 45 லட்சத்தைக் கைவசம் வைத்திருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 கோடி 95 லட்சமும் , ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் 6 கோடி 55 லட்சமும் , ராஜஸ்தான் ராயல்ஸ் 5 கோடி 95 லட்சமும் , கொல்கத்தா அணியானது 5 கோடி 45 லட்சமும் , குஜராத் டைட்டன்ஸ் அணி 5 கோடி 15 லட்சமும் வைத்திருக்கிறது.
மும்பை , ஹைதராபாத் , டெல்லி ஆகிய மூன்று அணிகளும் தலா 5 கோடி 10 லட்ச ரூபாய் கைவசம் வைத்திருக்கின்றன.
லக்னோ அணியானது வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே வைத்துக் கொண்டு கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்த பணத்தின் அளவானது அவர்கள் தற்போது கையில் வைத்திருக்கும் பணத்தின் அளவு மட்டுமே.
ஒரு வேளை அணியிலிருந்து வீரர்கள் விடுவிக்கப்பட்டாலோ அல்லது வெளியிலிருந்து சேர்த்துக் கொள்ளப்பட்டாலோ கைவசம் இருக்கும் பணத்தின் அளவு மாறுபடும்.
உதாரணமாக ஒரு வேளை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜாவை அணியிலிருந்து வெளியேற்றினால் அந்த அணியிடம் தற்போது இருக்கும் தொகையுடன் கூடுதலாக 16 கோடி ரூபாய் கைவசம் இருக்கும்.
இந்த நிலையில் ஐபிஎல் அணிகளின் ஏல நடவடிக்கைகள் வேகமாகத் தொடங்கியுள்ளன.
பவித்ரா பாலசுப்பிரமணியன்
கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி!
மாணவி பிரியாவின் ஒவ்வொரு உறுப்பாய் செயலிழந்தது எப்படி?