சற்றுமுன் வெளியாகி இருக்கும் ‘விசில் போடு’ பாடல் நன்றாக இருப்பதாக, ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவாகி வரும் The Greatest Of All Time படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது.
‘விசில் போடு’ என்று தொடங்கும் இப்பாடல் முழுக்க, முழுக்க மதுபான பார் பின்னணியில் படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது.
பாடலின் ஆரம்பத்தில் பிரச்சாரம் செய்யப்போகிறேன் என்பது போல வரிகள் இடம்பெற்றுள்ளன. பின்னர் அதை மாற்றி ஷாம்பெயின் என்று விஜய் பாடுகிறார்.
பாடலில் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த் ஆகியோருடன் அஜ்மலும் இடம் பெறுகிறார். ஆனால் மைக் மோகன் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்த் இருவரும் இடம்பெறவில்லை.
ஒருவேளை வீடியோவில் விஜயகாந்த் இடம் பெறுகிறாரா? என்று தெரியவில்லை. படக்குழு அதை சஸ்பென்ஸ் ஆகவும் வைத்திருக்கலாம்.
பாடலில் அஜ்மல் இடையில், இடையில் வந்து ஆடுகிறார். அதோடு மிகவும் இளமையாகவும் தெரிகிறார். எனவே அவர் கல்லூரி மாணவராக இருக்கலாம்.
விஜய், பிரபுதேவா, பிரஷாந்த் மூவரும் கல்லூரி பேராசிரியர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஜாலியாக நண்பர்களுடன் இருக்கும் மகன் விஜய் தனது தந்தை விஜய் செய்யும் செயலைக்கண்டு, அதிரடி ஆக்ஷனில் இறங்குவது போல திரைக்கதை இருக்கலாம்.
எது எப்படியோ பாடல் நன்றாக இருப்பதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் ரீல்ஸ் தொடங்கி எங்கெங்கும் இந்த பாடல் ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை 28, சரோஜா, மங்காத்தா, பிரியாணி, மாஸ், மாநாடு என வெங்கட் பிரபு இதுவரை இயக்கிய படங்களின் லோகோக்கள், இந்த விசில் போடு பாடலில் இடம்பெற்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடிக்கு பதிலாக ஓபிஎஸ் : ராமநாதபுரத்தில் வாக்கு சேகரித்த அண்ணாமலை
மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு?
“பாஜக இல்லையென்றால் ஜெயக்குமார் அவுட் ஆகியிருப்பார்” : பால் கனகராஜ்