இன்று (ஏப்ரல் 14) மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.
மும்பையின் கேப்டனாக ஹர்திக்கும், சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்டும் முதன்முறையாக மோதவுள்ளனர்.
இந்தநிலையில் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது ஹர்திக் பாண்டியா காயத்துடன் விளையாடி வருகிறார் என்பது தான்.
இதுகுறித்து முன்னாள் நியூசிலாந்து வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சைமன் டால், ”முதல் போட்டியில் முதல் ஓவரை வீசிய ஹர்திக் அடுத்தடுத்த போட்டிகளில் அவ்வாறு பந்து வீச வரவில்லை.
அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது. அவர் காயம் அடைந்து அதை மறைக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
அங்கே ஏதோ நடந்து கொண்டிருப்பதாக என் உள்ளுணர்வு சொல்லுகிறது”, என்று வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.
அவரின் இந்த கருத்து தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் உற்றுக் கவனிக்கப்படுகிறது. ஏனெனில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக்கை ரூபாய் 115 கோடி கொடுத்து மும்பை அணி வாங்கியது.
அதாவது நேரடியாக ரூபாய் 15 கோடியும், மறைமுகமாக ரூபாய் 1௦௦ கோடியும் குஜராத்திற்கு மும்பையால் வழங்கப்பட்டது. ஹர்திக்கை கேப்டனாக்கி ரோஹித்தை மோசமான முறையில் மும்பை அணி கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றியது.
இதனால் இன்றுவரை மும்பை அணிக்கு சொந்த ரசிகர்களின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கவில்லை.
ஹர்திக்கை ஏலத்தில் எடுத்தபோதே அடிக்கடி அவர் காயத்தால் அவதிப்படுவதை கிரிக்கெட் ரசிகர்கள் சுட்டிக்காட்டினர். என்றாலும் மும்பை அணி மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து அவரை கேப்டன் ஆக்கி அழகு பார்த்தது.
தற்போது ரசிகர்கள் சொன்னதற்கு ஏற்ப, அவர் காயத்தால் அவதிப்படுவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. உடனடியாக அட்மிட் ஆகும் அளவிற்கு காயம் இல்லை என்றாலும், விரைவில் இது வெட்ட வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டி: விஷால் அறிவிப்பு!
மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்?
மாறும் அரசியல் களம்…கருத்துக்கணிப்பில் வந்த மாற்றம்…பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியுமா?