காமன்வெல்த்: இந்தியாவிற்கு அடுத்த 2 வெள்ளி பதக்கங்கள், பதக்க எண்ணிக்கை 28

விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 10 கிலோ மீட்டர் நடை ஓட்டம் மற்றும் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.

இங்கிலாந்து பர்மிங்காம் நகரில் நடந்துக் கொண்டிருக்கும் 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பெண்களுக்கான 10 கிலோ மீட்டர் நடை ஒட்டத்தில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

43:38 என்ற விகிதத்தில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றார். ஆஸ்ரேலியா நாட்டை சேர்ந்த ஜெமிமா மாண்டாக் 42:34 என்ற விகிதத்தில் முதல் இடம் பிடித்து தங்கபதக்கத்தை வென்றார். கென்யா நாட்டை சேர்ந்த எமிலி வாமுஸ்யு 43:50 என்ற விகிதத்தில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதகத்தை வென்றுள்ளார்.

3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டபந்தயத்தில் இந்திய வீரர் அவினாஷ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 8:11:20 நிமிடங்களில் இலக்கை அடைந்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார். கென்யாவின் ஆபிரகாம் கிபிவோட் 8:11:15 சிமிடங்களில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்றார். அமோஸ் சீரம் 8:16:83 நிமிடங்களில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

இதன்மூலம் இந்தியா இதுவரை 2022 காமன்வெல்த் போட்டியில் 9 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 28 பதக்கங்களை வென்றுள்ளது. 2022 காமன்வெல்த் தரவரிசை பட்டியலலில் இந்தியா தற்போது 5 ஆம் இடத்தில் உள்ளது.

மோனிஷா

செஸ் ஒலிம்பியாட்: 7 சுற்றிலும் வெற்றிபெற்ற தமிழக வீரர்!

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *