பத்தாயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை!

Published On:

| By Selvam

241 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மா 10 ஆயிரம் ரன்களை கடந்து இன்று சாதனை படைத்தார்.

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் ஆட்டம் இன்று மதியம் மூன்று மணிக்கு இலங்கையில் உள்ள பிரமேதாசா மைதானத்தில் துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். கசன் ரஜிதா வீசிய ஏழாவது ஓவரில் சிக்சருடன் ரோகித் சர்மா 10000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். 241 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி ரோகித் சர்மா 10000 ரன்களை கடந்துள்ளார்.

விராட் கோலி 205 போட்டிகளில் 10000 ரன்களை கடந்தார். 10000 ரன்களை கடந்த மற்ற இந்திய வீரர்கள் சச்சின் -18,842, விராட் கோலி – 13,026, கங்குலி – 11,363, டிராவிட் – 10,889, தோனி – 10,773

கடந்த 2014-ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா அடித்த 264 ரன்கள் தான் ஒரு நாள் போட்டின் தனி நபரின் அதிபட்ச ஸ்கோராக உள்ளது.

செல்வம்

கோவையில் பயங்கரம் : நீதிமன்றம் சென்று திரும்பியவர்களுக்கு அரிவாள் வெட்டு!

எதிர்காலத்தில் படங்களில் நடிக்க முடியாது: விஷாலுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel