சென்னை – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள்: எங்கெல்லாம் நிற்கும்?

Published On:

| By Kavi

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு மே 17-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரைவு ரயில் (06037) இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில் சென்னையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும்.
இதேபோல, மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மே 18-ந் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் விரைவு ரயில் (06038) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 11.30 மணிக்கு வந்து சேரும்.

தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாப்புலியூர், கடலூர் போர்ட், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : சில்லி பனீர்!

இங்க வடை, அங்க சப்பாத்தியா? அப்டேட் குமாரு

நடிகர் சங்க கட்டிட பணிக்கு தனுஷ் கொடுத்த ஃபண்ட் – எவ்வளவு தெரியுமா?

புற்றுநோய் பாதித்தபோது… மனம் உடைந்த மனிஷா கொய்ராலா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share