நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு ஜூஸ் கடைக்கு போயிருந்தேன். ஆளுக்கு ஒரு வாட்டர் மெலன் ஜூஸ் ஆர்டர் பண்ணோம்.
அவருக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தபோது, “பங்குச்சந்தை சரிவை தேர்தலோடு பொருத்திப்பார்க்க கூடாதுன்னு அமித்ஷா பேசியிருக்கிறாருன்னு” சொன்னாப்ல…
அதுக்கு நான், “ஆமாமா… பங்குச்சந்தைய தொடர்புபடுத்தக்கூடாது. ராமர் கோவில மட்டும் தான் தொடர்பு படுத்தனும்னு” சொல்லிட்டு கிளம்பிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
குழந்தைகளைப் பற்றிய பெற்றோரின் எதிர்கால கவலைகளில் ஒன்று.. “இப்பிடி தூங்குறாங்களே நாளைக்கு ஸ்கூல் திறந்தா இவங்களை எப்பிடி எழுப்பி சேத்தறது” என்பது
கடைநிலை ஊழியன்
புது படம் டவுன்லோட் பண்ணும் போது.. மொபைல் – தம்பி.. தம்பி.. போதும் ப்பா.. ஏற்கனவே டவுன்லோட் பண்ணுன படத்தயே பாக்க மாட்டிங்கிற.. இன்ஸ்டாகிராம், ட்விட்டர் னு எனக்கே போர் அடிக்குதுப்பா.. டவுன்லோட் பண்ணுன ஏதாது படத்த பாருப்பா..
balebalu
என்னடா எப்ப பாரு சாப்பிட்டுக்கிட்டே இருக்க ? ஆமாண்ணே TV ஷோ வுல படிச்ச வேலையை விட புடிச்ச வேலையை செய்ய சொன்னாங்க அதான் எனக்கு பிடிச்சா மாதிரி சாப்பிடுற வேலையை செய்யுறேன்
Writer SJB
மாமா என்னை நாலு கெட்ட வார்த்தைல திட்டுங்க..! நீ என்ன மாப்ள தப்பு பண்ண..? ஐயோ தப்பு பண்ணல மாமா பரோட்டாவுக்கு மாவு பிசைய போறேன் நீங்க திட்டுனா அதே கோவத்துல போய் நல்லா மாவு பிசைஞ்சிடுவேன்..!!!
செங்காந்தள்
இந்து-முஸ்லீம் என பேசத் தொடங்கும் அன்றே அரசியலில் இருந்து விலகுவேன், அனைவரும் எனக்கு சமம்’ – பிரதமர் மோடி வாக்கு சுத்தமாக இருந்தால் தான் வாக்கு கிடைக்கும்.
Writer SJB
சேலத்துல மூணு நாளா மழை பேஞ்சு கிளைமேட் மாறி போய் குளுகுளுன்னு இருக்கு அப்புறம் ஏன் சோகமா இருக்க..? நான் மூணு நாளைக்கு முன்ன தான் சார் ஜூஸ் கடை ஆரம்பிச்சேன்..!
கடைநிலை ஊழியன்
bsnl – இருங்கடா.. நான் 5G ரிலீஸ் பண்ணுறேன்.. அப்பறம் இருக்கு உங்களுக்கு..
லாக் ஆஃப்
+1
2
+1
5
+1
+1
3
+1
+1
3
+1