இயர்பட்ஸ் என்றாலே நல்ல ஃபீச்சர்களுடன் வாங்க வேண்டும் என்றால் பட்ஜெட் கொஞ்சம் கூடுதலாக தான் இருக்கும். இது போன்ற பட்ஜெட் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே ஆடியோ சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான போட் தற்போது ரூ.1,799 என்ற விலையில் பல்வேறு அம்சங்கள் அடங்கிய இயர்பட்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
போட் நிறுவனம் அறிமுகப்படுத்தப்போகும் போட் ஏர்டோப்ஸ் 800 (Boat Airdopes 800) டச் கன்ட்ரோல், லோவ் லேட்டன்சி, ஏஎஸ்பி சார்ஜிங், நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
போட் ஏர்டோப்ஸ் 800 இயர்பட்ஸ் பற்றிய முழு விவரங்களைப் பார்க்கலாம்:
- மேட் பினிஷிங்கில் பிரீமியமான இன்-இயர் டிசன்
- 10 மிமீ டைட்டானியம் டிரைவர்கள்
- வி 5.3 ப்ளூடூத் கனெக்டிவிட்டி
- இன்டர்ஸ்டெல்லார் ஒயிட், இன்டர்ஸ்டெல்லார் கிரீன், இன்டர்ஸ்டெல்லார் ப்ளாக் மற்றும் இன்டர்ஸ்டெல்லார் ப்ளூ ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கவிருக்கிறது
- டால்பி ஆடியோ சப்போர்ட், சிக்னேச்சர் சவுண்ட் மற்றும் ஈஎன்எக்ஸ் டெக்னாலஜி கொண்ட குவாட் மைக் இடம்பெற்றுள்ளது.
- 5 நிமிடம் சார்ஜ் செய்தாலே 100 நிமிடங்களுக்கு ப்ளேபேக் டைம் கிடைக்கும்.
- ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கும் இந்த போட் ஏர்டோப்ஸ் 800 இயர்பட்ஸ்சை முழு சார்ஜ் செய்தால் 40 மணி நேரம் வரை உபயோகிக்க முடியும்.
- இயரபிள் ஆப் சர்போர்ட் கொண்டுள்ளதால் அடாப்டிவ் ஈகியூ மோட்களை பயன்படுத்தலாம்.
- வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் பீஸ்ட் மோட் உள்ளது.
- பாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப் சி சப்போர்ட் கொண்ட பேட்டரி.
- ஒரே நேரத்தில் மொபைல், லேப்டாப் போன்ற மல்டி டிவைஸ் கனெக்ட் செய்யலாம்.
- இன் இயர் டிடெக்சன் சப்போர்ட் மற்றும் 50ms லோவ் லேட்டன்சி உள்ளது.
இந்த போட் ஏர்டோப்ஸ் 800 இயர்பட்ஸின் விற்பனையானது வரும் மே 17 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பதஞ்சலி வழக்கு… மன்னிப்பு கேட்ட மருத்துவ சங்கத்தலைவர்… ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்!
தனிச்செயலாளர் தினேஷ் குமார் தந்தை மறைவு: ஸ்டாலின் அஞ்சலி!