yஅதிமுக பிளவுக்கு பாஜக-தான் காரணம் : நல்லகண்ணு

public

வருமான வரித்துறை செய்த சோதனைக்கும், அதிமுக-வில் பிளவு ஏற்பட்டதுக்கும் முழுமையான காரணம் பாஜக-தான் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின், அதிமுக இரண்டாகப் பிரிந்தது. இந்நிலையில், தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது இவை அனைத்தும் ஆளும் கட்சியை அதிரவைத்துள்ளது.

இந்தச் சோதனையின்போது அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் இடையூறு செய்தனர். எனவே, அவர்கள் மீது வருமான வரித்துறையினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், நான்கு பேர்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது ஆளும்கட்சியினரை மேலும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.

இந்நிலையில், இரட்டை இலைச் சின்னம் பெற்றுத்தரக் கோரி, டி.டி.வி.தினகரன் 50 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, இடைத்தரகர் சுகேஷ் சந்தர் என்பவரை டெல்லி காவல்துறை திங்கள்கிழமை (இன்று) கைது செய்துள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், 17.04.2017 திங்கள்கிழமை (இன்று) செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, அதிமுக-வின் பிளவுக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும் முழுப் பொறுப்பு பாஜக-தான். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பதவி விலக வேண்டும். மக்கள் விரோதப்போக்கை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் இணைந்து செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *