xகச்சா எண்ணெய்: தேர்தலுக்குப் பின்னர் முடிவு!

public

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவது குறித்துத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஆலோசிக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டிடமிருந்து இதர உலக நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன் மீதான தடை நிறைவுற்று இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், ஈரான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரான ஜாவேத் ஷரிஃப் இந்தியாவுக்கு வர்த்தக ரீதியிலான சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜைச் சந்தித்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து டெல்லியில் மே 14ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மூன்று மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் முடிவுக்குப் பின்னர் இதுகுறித்த முடிவு மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இரண்டாவது முறையாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுக்குப் பயணம் வந்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்திருந்தாலும், கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்குத் தடை நீக்கப்பட்டது. இந்தியா தனது உள்நாட்டுக் கச்சா எண்ணெய்க்கான தேவையில் 80 சதவிகிதத்தை இறக்குமதி வாயிலாகவே பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா](https://minnambalam.com/k/2019/05/14/80)

**

.

**

[ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!](https://minnambalam.com/k/2019/05/14/33)

**

.

**

[சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!](https://minnambalam.com/k/2019/05/14/68)

**

.

**

[தேவராட்டம் கொடுத்த லாபம்!](https://minnambalam.com/k/2019/05/14/64)

**

.

**

[திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை](https://minnambalam.com/k/2019/05/14/76)

**

.

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *