மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 மே 2019

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

திமுக பொருளாளர் துரைமுருகன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று நேரில் சந்தித்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சென்னையில் நேற்று (மே 13) நேரில் சந்தித்த நிலையில், இன்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்துள்ளார். துரைமுருகன், அவர் மகன் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகன் மனைவி ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். திரும்பி வரும் வழியில் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துள்ளார்.

ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தில் குடும்பத்துடன் துரைமுருகன் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆந்திர முதல்வருடன் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட நட்பின் அடிப்படையில்தான் இந்த சந்திப்பு நடந்ததாகவும், அரசியல் காரணம் எதுவும் இல்லை என்றும் துரைமுருகன் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சந்திரசேகர ராவுடனான சந்திப்பின்போதும் துரைமுருகன் இருந்த நிலையில் இன்று சந்திரபாபு நாயுடுவை அவர் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக இடம்பெற்றுள்ள நிலையில், சந்திரசேகர ராவுடனான சந்திப்பு குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் துரைமுருகன் விளக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் சந்திரபாபு நாயுடு இல்லையென்றாலும், அண்மைக்காலமாக காங்கிரஸ் தலைவர்களுடன் மிக நெருக்கமாகவே அவர் இருந்து வருகிறார். இதனால் இன்றைய சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

செவ்வாய் 14 மே 2019