முத்தையாவுடன் மீண்டும் கைகோர்க்கும் விஷால்?

Published On:

| By Selvam

ஹரி – விஷால் கூட்டணியில் வெளியான ரத்னம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்க உள்ளார். அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், துப்பறிவாளன் 2 படத்திற்கு பின் இயக்குநர் முத்தையா உடன் விஷால் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

குட்டி புலி, கொம்பன், தேவராட்டம், விருமன் போன்ற ஆக்சன் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் முத்தையா.

கடைசியாக இவரது இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்  திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் “சுள்ளான் சேது” என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில், அடுத்ததாக விஷால் – முத்தையா கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான மருது திரைப்படம் வெற்றி படமாக அமைந்ததால் இந்த புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முத்தையா – விஷால் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

குவாரியில் வெடி விபத்து… 3 பேர் உடல் சிதறி பலி : மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் காணவில்லை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share