கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு : உச்ச நீதிமன்றத்தில் மனு!

இந்தியா

கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்குப் பக்க விளைவுகள் ஏற்படுவதாகத் தயாரிப்பு நிறுவனமே ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான டோசேஜ்கள் போடப்பட்டது.

இந்நிலையில் கோவிஷீல்டு செலுத்திக்கொண்டதால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக லண்டன் உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 51 பேர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா, இந்த மருந்தைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு அரிதான ரத்தம் உறைதல் மற்றும் பிளேட்லெட் குறைதல் ஆகிய பக்க விளைவுகள் ஏற்படும். ஆனால் இது எதனால் ஏற்படுகிறது என தெரியவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த செய்தி உலகம் முழுவதும் கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில், “இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு டோஸ் போடப்பட்டுள்ளன. கோவிட் 19க்குப் பிறகு மாரடைப்பு மற்றும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பது ஆகியவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களுக்குக் கூட மாரடைப்பு ஏற்படுகிறது.

கோவிஷீல்ட் மருந்தைத் தயாரித்த நிறுவனம் நீதிமன்றத்தில் ஆவணம் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அபாயகரமான விளைவுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எனவே இதுதொடர்பாக மருத்துவர்கள் நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்தச்சூழலில் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 10 லட்சத்தில் வெறும் 7 பேருக்கு மட்டுமே இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்று தொற்று நோயியல் நிபுணரும், ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானியுமான டாக்டர் ராமன் கங்ககேத்கர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“நடராஜனுக்கு டி20 உலககோப்பையில் இடமில்லையா?” – சரத்குமார் கேள்வி!

முத்தையாவுடன் மீண்டும் கைகோர்க்கும் விஷால்?

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *