மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 மே 2019

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

வருமான வரித் தாக்கலுக்கான ரீபண்ட் தொகையைப் பெறுவது தொடர்பாகப் போலியான மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வருவது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றை நம்பவேண்டாம் என்று வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருமான வரித் தாக்கலுக்கான ரீபண்ட் (திருப்பிப் பெறப்படும் தொகை) குறித்து வருமான வரி செலுத்துவோர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் இணைய இணைப்பு அனுப்பப்படுவதாகச் சென்னை வருமானவரித் துறை அலுவலகத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. இது போன்ற மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போலியானவை எனவும், அவற்றை நம்பவேண்டாம் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சென்னை முதன்மை தலைமை வருமான வரி அலுவலகத்தின் கூடுதல் ஆணையர் ஆர்.இளவரசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தனிநபர் அடையாள எண், ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (one time password), கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றின் கடவுச்சொல் குறித்த தகவல்கள், ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரம், ஏடிஎம் கடவுச்சொல் ஆகியவற்றை மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது தொலைப்பேசி மூலம் வருமான வரித்துறை கேட்பதில்லை. வருமான வரி செலுத்துவோர் தங்களது முகவரி, வங்கிக் கணக்கு எண் போன்ற தகவல்களை வருமானவரித் துறையின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

3 நிமிட வாசிப்பு

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

செவ்வாய் 14 மே 2019