டி20 உலக கோப்பை போட்டியில் தமிழக வீரர் நடராஜனை அணியில் சேர்க்க தேர்வுக்குழுவினர் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஜூன் 1 முதல் 29 வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று (ஏப்ரல் 30) அறிவிக்கப்பட்டனர். ரோகித் சர்மா தலைமையிலான அணியில், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஜஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் ஃபண்ட், ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இதில் தமிழகத்தைச் சேர்த அஸ்வின், நடராஜன், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
குறிப்பாக ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது யார்க்கர்கள் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் இருந்தது. குறிப்பாக கடைசி ஓவர்களில் அணியின் போக்கை மாற்றக்கூடிய வகையில் நடராஜன் பந்துவீசுகிறார்.
இந்தநிலையில், நடராஜன் இந்த முறை டி20 உலக கோப்பை தொடரில் இடம்பெறுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் அணியில் இடம்பெறவில்லை.
இதுகுறித்து நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தனது எக்ஸ் வலைதள பதிவில், “டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில், சிறந்த வேகப்பந்து வீச்சாளரும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடராஜன் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. வாய்ப்பு இருப்பின் அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முத்தையாவுடன் மீண்டும் கைகோர்க்கும் விஷால்?
குவாரியில் வெடி விபத்து… 3 பேர் உடல் சிதறி பலி : மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
சரத் அண்ணா, நீங்கதான் உங்க கட்சித் தலைவருகிட்ட சொல்லி, எப்படியாச்சும் நடு ராத்திரியில போயாச்சும் அவர டீம்ல சேத்து வுட்ருங்கண்ணா…