மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

பாஜகவுடன் பேசவில்லை என்று ஸ்டாலின் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், அதுதொடர்பாக தமிழிசை பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவுடன் திமுக பேசிவருவது உண்மைதான் என்று பேட்டியளித்திருந்தார். இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், “மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். அப்படி நிரூபிக்கத் தவறினால் நரேந்திர மோடியும், மாநில பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், “என்னுடைய அரசியல் வாழ்க்கை என்றுமே நேர்மையானது. கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் திமுக பேசியது என நான் கூறியது உண்மைதான். பாஜகவுடன் திமுக பேசியதாக எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் கூறினேன். நான் சொல்வதில் உண்மை இல்லாமல் இருக்காது. ஸ்டாலின் அரசியலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால், என்னை அரசியலை விட்டு விலகச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. நான் கூறியது உண்மையா இல்லையா என்பதை ஸ்டாலின் நிரூபிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon