tஹெல்த் ஹேமா: இளம்பருவத்தினருக்கான உணவுகள்!

public

பிள்ளைகளின் போக்கிலேயே உணவு பற்றிய பேச்சைக் கொண்டு செல்லுங்கள். உதாரணத்துக்கு அந்த வயதில் எல்லா பிள்ளைகளுக்கும் சீக்கிரம் வளர வேண்டும் என்கிற ஆவல் இருக்கும். எந்த மாதிரி உணவுகளைச் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும் என்று பேசலாம். நிறைய டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு தமது நண்பர்கள் தம்மைவிட வேகமாக வளர்வதாகவும், அதற்குக் காரணம் அவர் களது உணவு அல்ல… ஜீன்ஸ் என்றும் ஓர் எண்ணம் உண்டு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, கால்சியம் நிறைந்த உணவுகளின் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். ஏரியேட்டட் குளிர் பானங்களில் உள்ள பாஸ்போரிக் அமிலமானது, எலும்புகளில் உள்ள கால்சியத்தை அழித்து, எலும்புகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதைப் புரிய வைக்கலாம். வளர்ச்சி என்பதை மீறி, அவர்களுக்கு அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்பதிலும் ஆர்வம் அதிகமிருக்கும்.

சத்தான உணவு என்பது அழகான சருமத்துடனும் தொடர்புடையது என எடுத்துச் சொல்லலாம். விளையாட்டில் ஆர்வமிருக்கும் பிள்ளைகளுக்கு சத்தான உணவு என்பது, விளையாட்டுத் திறமைக்கும், அது தொடர்பான உடற்பயிற்சி மற்றும் உடல் உறுதிக்கும்கூட அவசியமானது எனப் புரிய வைக்கலாம்.

நல்ல சத்துணவுப் பழக்கத்தை அடையாளம் காட்டுங்கள். இதை சாப்பிட்டா நல்லது என போதிக்காமல், அத்தகைய உணவுகளை நீங்கள் சாப்பிட்டால் அவர்களும் அதைப் பின்பற்றுவார்கள். உணவுப் பொருட்களை வாங்குவதிலும், தினசரி உணவைத் திட்டமிடுவதிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள். நல்ல உணவுக்கும் ஆரோக்கியத்துக்குமான தொடர்பை புரிய வையுங்கள்.

பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிற உணவுகள், அதிக சர்க்கரை, செயற்கை நிறம் மற்றும் சுவை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள், கெமிக்கல் சேர்த்த உணவுகளை உண்பதற்குத் தடை விதியுங்கள். இத்தகைய உணவுகள் டீன் ஏஜ் பிள்ளைகளின் எலும்புகளில் உள்ள கால்சியம் சத்தை அடியோடு அரித்து விடும் என்பதை உணர்த்துங்கள்.

விடலைப் பருவத்தில் ஆண், பெண் இருவருக்குமே அதற்கு முந்தைய வயதை விட 33 சதவிகிதம் அதிகமான கால்சியம் தேவை. (நாளொன்றுக்கு 1,200 மி.கி.)

விடலைப்பருவத்தில் மூளையானது முழு வளர்ச்சியை அடைந்து விடுகிறது. ஆனாலும், அது சில மாற்றங்களை செய்து கொண்டே இருக்கிறது. மூளை வளர்ச்சிக்கும் சத்தான உணவு அவசியம். பெரும்பாலும் இந்த வயதில் ஆண்டிஆக்ஸிடென்ட், கோலீன், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல்கூட்டு மாவுச்சத்து (Complex carbohydrates) கொண்ட உணவுகள், மூளையின் ஆரோகியத்துக்கு அவசியம்.

கைக்குத்தல் அரிசி. கம்பு, கேழ்வரகு, கோதுமை போன்ற முழு தானியங்கள். இந்த உணவுப்பொருட்கள் மூளையைச் சிறந்து இயங்கச் செய்வது மட்டுமல்லாமல் மனச்சோர்வையும் தடுப்பவை. நண்பர்களைப் பார்த்து, அவர்களைப் போல இருக்க வேண்டும் என்கிற ஆவலின் காரணமாகவும், விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும் கொழுப்பைத் தவிர்க்கிற பிள்ளைகள் அதிகம். அப்படி அவர்கள் கொழுப்பைத் தவிர்ப்பதென முடிவெடுத்ததும், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பையும் சேர்த்தே தவிர்க்கிறார்கள். அவர்களுக்கு மேற்கூறிய உணவுகளை அதிகமாகவும், எண்ணெயில் பொரித்த உணவுகளைக் குறைவாகவும் எடுத்துக் கொள்ளப் பழக்க வேண்டும்.

விடலைப் பருவத்தில் ஆண்களுக்கு 20 சதவிகிதமும், பெண்களுக்கு 33 சதவிகிதமும் இரும்புச் சத்து கூடுதலாகத் தேவை. ஆண்களுக்கு தசை வளர்ச்சிக்கும், பெண்களுக்கு மாதவிலக்கின் போதான இழப்புக்கும் இது முக்கியம் எனப் புரிய வையுங்கள்.

ஆண்களுக்கு 25 சதவிகிதமும் (தினசரி 15 கிராம்), பெண்களுக்கு அதைவிட சற்று குறைவாகவும் புரதம் தேவை என்பதை வலியுறுத்தி, அதற்கேற்ற உணவுகளைக் கொடுக்கலாம்.

ஆண் பிள்ளைகளுக்கு 33 சதவிகிதமும், பெண்களுக்கு 20 சதவிகிதமும் அதிகமான துத்தநாகச் சத்து தேவை.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *