tஅறநிலையத் துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணை!

public

பழநி பால தண்டாயுதபாணி கோயிலின் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில், கோயில் முன்னாள் மற்றும் துணை ஆணையர்கள் எட்டு பேரிடம் சிலைக் கடத்தல் சிறப்புப் பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழநி பால தண்டாயுதபாணி முருகன் கோயிலில் கடந்த 2004ஆம் ஆண்டு உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில், ஸ்தபதி முத்தையா, கோயிலின் முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, தங்க நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த முறைகேடு வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் தனபால் முன்ஜாமீன் பெற்று வீட்டுக்காவலில் உள்ளார். அவரிடம் சிலைக் கடத்தல் சிறப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பழநியில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி வெங்கட்ராமன் தலைமையிலான காவல் துறையினர், பழநி கோயிலில் 2004ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்த இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையாளர்களான ராஜமாணிக்கம், மங்கையர்க்கரசி, பாஸ்கரன், அசோக், சுதர்சன், மேனகா ஆகியோரிடம் விசாரணையை நேற்று (ஜூன் 26) தொடங்கியுள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் கைது நடவடிக்கை தொடரும் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *