tஅன்பு அத்தான் ‘பஞ்சாயத்து’: அப்டேட் குமாரு

public

“இம்புட்டுக்கான பிள்ளை பலூன் கேட்டது வாங்கிக்கொடுக்கலை, ஆட்டக்காரிக்கு 500 ரூபாயா”ன்னு களவாணி பட டயலாக்கை அப்படியே திருப்பி டில்லி பக்கம் அனுப்பிட்டாங்க. ஆமா கஜா, ஒக்கின்னு இங்க உள்ளவங்க எல்லாம் செத்து மிதந்தாலும் இங்குட்டு ஒரு பைசா கொடுக்காம மாலத்தீவுக்கு அமௌண்ட் கொடுக்குறது தெரிஞ்சா சும்மா இருப்பாங்களா, அதான் கொந்தளிச்சுட்டாங்க.

இது தெரியாம நேற்று சிலை திறப்பு விழாவுக்கு போனவங்களை விட போகாத தமிழிசை அக்கா கரெக்டா யார் யார் என்ன பேசுனாங்கன்னு சொல்லிகிட்டு இருக்காங்க. இது எப்படி நடந்ததுன்னு நம்ம ஆள்கள் ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிட்டு வர்றாங்க. ஒரே கூத்தா இருக்கு.. அப்டேட்டை பாருங்க..

**@Kozhiyaar**

நீங்கள் எதிர்பார்த்தது போல் நான் நடந்து கொள்கிறேன் எனில், என் நடிப்பை நீங்கள் ரசிக்க தொடங்கி விட்டீர்கள் என்று பொருள்!!!

**@urs_venbaa**

காலையில் எழுந்திருக்கலாமா

வேண்டாமா என்பதே பனிப்போர்

**@Thaadikkaran**

அரசு விழாவில் மேடையிலேயே தூங்கிவிழுந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

# முதல்வர் எப்போ தூங்குறார்னு தெரிலன்னு சொன்ன சீனிவாசண்ணே நீங்க தூங்குறதே ஊரே பார்த்திருச்சுண்ணே..!!

**@sultan_Twitz**

“தமிழக அரசை ரிமோட் மூலம் பாஜக இயக்குகிறது”- சந்திரபாபு நாயுடு #

இவ்ளோ நாளா நீங்களும் அந்த ரிமோட்டோட கன்ரோலில் தான் இருந்தீங்க சாரே..?!

**@mohanramko**

வீட்ல எவ்வளவு திட்டினாலும், வெளியில பேசும்போது ‘சார் கிட்ட கேட்டு சொல்றேன்’னு மரியாதையா சொல்லும்போது மெய் சிலிர்க்க வைக்கிறாங்க, மனைவி…

**@Thaadikkaran**

ஹெல்ப்ன்னு ஒருத்தர்க்கு கால் பண்ணி கேட்டா, எல்லா டீட்டைலும் கேட்டுட்டு கடைசில எனக்கு யாரரையும் தெரியாதேன்னு சொல்றதெல்லாம் டிசைன்ல இருக்கு..!

**@crazie_abu**

நல்ல அனுபவம் கிடைக்கிறப்போ

“பரவசப்படனும்”

மோசமான அனுபவம் கிடைக்கிறப்போ “பக்குவப்படனும்”

**@manipmp**

என் வீட்டில் என் மனைவிதான் டெசிசன் மேக்கர்

நான் வெறும் டெசிசன்

-பேயோன்

**@shivaas_twitz**

உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்…

பப்ஸ் தின்னவன் வாயை துடைச்சே ஆகணும்..!

**@Vicky_stirring**

பாஜகவின் மீது வீசப்படும் கற்களை கொண்டு நாங்கள் கோட்டை கட்டுவோம் – தமிழிசை

அண்ணன் அடுத்து ஒரு கடப்பாரையை முழுங்குவாரு மொமண்ட்

**@amuduarattai**

மொபைல் ரிப்பேர் ஆகி, சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லும் போது, உடம்பு சரியில்லாத குழந்தையை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிச் செல்வது போல, பதைபதைப்பாகத்தான் இருக்கிறது.

**@SuDLX**

என்னது எக்குத்தப்பா பவுன்ஸாகுதா? அப்பறம் ஏண்டா அங்கயே நிக்கறீங்க ரூம்புல ஏசி இருக்கு வாங்கடா – கே எல் ராகுல்

**@amuduarattai**

பிள்ளைகள் “சாப்பிடும் தோசை”யை எண்ணும் போதும், “நம் பிள்ளைகள் யாரையும் காதலிக்க மாட்டார்கள்” என்று எண்ணும் போதும், அம்மாவின் கணக்கு பெருபாலும், தப்பாகத் தான் இருக்கும்.

**@ItsJokker**

பல வருஷமா காண்டாக்ட்ல இல்லாத பிரெண்ட் போன் போட்டா ரெண்டே ரெண்டு காரணமாதான் இருக்கும்.

“கடன் கேட்பான்” இல்லாட்டி,

“கல்யாணம்” னு சொல்வான் என்று அறிக..!!!

**@yugarajesh2**

சூரிய வம்சம் படத்தில பாராட்டு விழாவை ஒளிஞ்சு நின்னு பார்க்கிற அப்பா சரத்குமார் மாதிரியே தமிழிசை அக்காவும் கலைஞர் சிலை திறப்பு விழாவை பார்த்துக்கிட்டு ட்விட் போடுறாங்கன்னு நினைக்கிறேன்.

**@iam_ni_la**

நிவாரணம் வரவில்லை என்பவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி #

பேருக்குத்தான் அதிமுக பேசுவது எல்லாம் அப்படியே பாஜக.

**@ItsJokker**

காரணமே இல்லாம சண்டை போட்டு, கோவம் போன பிறகு பேசலாம்னு கேப் விட்டு போயி பேசுனா,

ஏன் இவ்ளோ நேரமா பேசலன்னு சொல்லி சண்டை போடுறதுலாம், பெண்களுக்கே உரித்தான கைவந்தகலை.

டிசைன்ல இருக்கு அப்படி..!!

**@amuduarattai**

மார்கழி வரும் பின்னே, குழந்தைகளுக்கு மார்சளி வரும் முன்னே.

**@motheen_farook**

பிரச்னைன்றது நாய்க்குட்டி மாதிரி நாம ஓடுனா அது துரத்தும் நாம துரத்துனா அது ஓடும் ..!!

**@rahimgazali**

தமிழில் புதிய வார்த்தைகள் அறிமுகப் படுத்தினால் அம்மாவின் அரசு தக்க சன்மானம் வழங்கும் – மா.பாண்டியராஜன்

அப்படின்னா ‘வெற்றிகரமான தோல்வி’ என்ற புது வார்த்தையை கண்டுபிடித்த எனக்குத்தான் சன்மானம் கொடுக்கணும் – தமிழிசை

**@muttaikaran**

சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி வளைந்து கொடுத்து போனால்…

இன்னும் வளைந்து போ என சொல்கின்றது சூழ்நிலை…

**@AlaTwitz**

மாலத்தீவுக்கு 1.4 பில்லியன் டாலர் இந்தியா நிதியுதவி – செய்தி

இங்க புயல் பாதிப்புல செத்து பொழச்சு வந்துருக்கோம், மாலத்தீவுக்கு பில்லியன் கணக்குல நிதிஉதவியாம்

**@Giri47436512**

கேட்க கூடாதது?

பொண்ணுங்ககிட்ட வயசு..

ஆண்கள்கிட்ட வருமானம்..

யமஹா வச்சிருக்கறவங்க கிட்ட “மைலேஜ்”

**@HAJAMYDEENNKS**

பிரதமர் பதவி பறிபோனால் மிச்சம் இருக்குற நாடுகளை சுற்றிப்பார்க்க முடியாதே என்பதுதான் மோடியின் கவலையாக இருக்கும் !

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *