Sஅஜித் குறித்து நெகிழும் நடிகை!

public

ஈகோ உள்ளவர்கள் நடிகர் அஜித்தைப் பார்த்துத் திருந்துங்கள் என தெலுங்கு நடிகை மீனா வாசு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விஸ்வாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. அஜித்துடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் தெலுங்கு நடிகை மீனா வாசுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

அஜித்துடன் இணைந்து எடுத்துள்ள ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மீனா வாசு, “நான் என் கேரியரில் அஜித்போன்ற ஒரு தன்னடக்கமானவரை பார்த்ததே இல்லை. அந்தளவுக்கு இனிமையான, எளிமையான நபர் அவர். ஹிட் படம் கொடுத்துவிட்டால் தங்களை பெரிய ஆளாகக் காட்டிக்கொண்டு வலம்வருபவர்களைப் பார்த்துள்ளேன். அந்தமாதிரி ஈகோ குணம் உடையவர்கள் அஜித்தைப் பார்த்துத் திருந்துங்கள்” எனக் கூறும் தொனியில் பதிவிட்டுள்ளார். மேலும், அம்மாதிரியானவர்கள் அஜித்தின் காலில் விழுந்து வணங்கினால் அஜித்தின் குணத்திலிருந்து 10 சதவிகிதமாவது அவர்களுக்குக் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது. சிலர் இது நடிகர் அஜித்தை அவமரியாதை செய்வதாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளனர். காரணம் அஜித்தின் காலில் விழுவது அவருக்கு பிடிக்காது என்று விமர்சனமும் செய்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *