Qபுதுச்சேரி ஆளுநர் மாறுகிறாரா?

public

புதுச்சேரி துணை நிலை ஆளுநராகப் பதவியேற்று நாளையுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் கிரண் பேடி, முதல்வர் நாராயண சாமிக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நிலவிவருகிறது. கிரண் பேடி அரசு நிர்வாக விவகாரத்தில் தலையிடுவதற்கு யாருக்கு அதிகாரம் என்று கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்குத்தான் அதிகாரம் என்று உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கிரண் பேடி சார்பில் இன்று (மே 28) மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும். இந்த தீர்ப்பால் மாநிலத்தில் அரசுப்பணிகள் முடங்கி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. துணை நிலை ஆளுநராக தனக்கான அதிகாரங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கிரண் பேடி தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை மறுநாள் விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக கிரண் பேடி டெல்லி சென்றுள்ளார். அதற்கு முன்பாக, அவர் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மக்கள் நலனுக்காக ராஜ் நிவாஸ்க்கு அதிகப்படியான பணிகளைக் கொடுத்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து புதுச்சேரிக்கு சேவை செய்ய அனுமதித்த பிரதமர் மோடிக்கு நன்றி. தலைமைச் செயலர் மற்றும் தன்னுடன் இணைந்து சிறப்பாகவும், விருப்பத்துடனும் பணியாற்றிய அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும், புதுச்சேரி மக்களுக்கும் நன்றி என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்

மேலும், புதுச்சேரி மாநிலத்திற்குத் தேவையானவற்றை மத்திய அரசுக்குத் தெரிவிப்பேன் என்றும் தேவையான திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன் என்றும் தனது கடிதத்தில் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு கிரண் பேடி அனைவருக்கும் நன்றி தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் வேறு மாநில ஆளுநராக, குறிப்பாக மேற்கு வங்கம் அல்லது கேரளா ஆகிய மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[தேர்தல் முடிவு: சசிகலா ரியாக்ஷன்!](https://minnambalam.com/k/2019/05/28/27)

**

.

**

[திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?](https://minnambalam.com/k/2019/05/28/29)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/05/27/68)

**

.

**

[மோடி பதவியேற்பு விழா: யாருக்கெல்லாம் அழைப்பு?](https://minnambalam.com/k/2019/05/28/31)

**

.

**

[ராகுல் பிடிவாதம்: அடுத்த காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங்?](https://minnambalam.com/k/2019/05/28/46)

**

.

.

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *