மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

மோடி பதவியேற்பு விழா: யாருக்கெல்லாம் அழைப்பு?

மோடி பதவியேற்பு விழா: யாருக்கெல்லாம் அழைப்பு?

பிரதமர் மோடி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள பிம்ஸ்டெக் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது

நரேந்திர மோடி மே 30ஆம் தேதி மீண்டும் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார். அன்று இரவு 7 மணிக்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு நாட்டு அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொழில்துறை, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான வங்காள விரிகுடா நாடுகள் குழுவில் (BIMSTEC) அங்கம் வகிக்கிற வங்கதேசம், மியான்மர், நேபாளம், பூட்டான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளின் பிரதமர்கள் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

கிர்கிஸ் குடியரசு மற்றும் மொரிசியஸ் நாடுகளுக்கும் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இம்முறையும் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவர் மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதால் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவருக்குப் பதிலாக மூத்த அமைச்சர் ஏ.கே.எம்.முசாமெல் ஹக் பங்கேற்க உள்ளார் என்றும் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திராவில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிற சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மோடி 2014ஆம் ஆண்டு முதன்முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றபோது சார்க் நாடுகளின் தலைவர்களுக்குப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்போதைய பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப், இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆகியோர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டிருந்தனர். ஒட்டுமொத்தமாக அப்போது சுமார் 2,000 பேர் வரையில் கலந்துகொண்டிருந்தனர். ஆனால், இம்முறை தேர்தலுக்கு முன்பிருந்தே இந்தியா - பாகிஸ்தான் இடையில் ஓர் இணக்கமற்ற சூழல் நிலவி வரும் நிலையில் தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்

.

திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?

.

தேர்தல் முடிவு: சசிகலா ரியாக்‌ஷன்!

.

ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?

.

தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!

.

.

.

செவ்வாய், 28 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon