qகொடநாடு: ஸ்டாலின் பேச்சுக்குத் தடையில்லை!

public

கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவதற்குத் தடை விதிக்க கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 1) தள்ளுபடி செய்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் தான் கலந்து கொள்ளும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தாக்கி பேசி வருகிறார். அப்போது கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து பேசும் ஸ்டாலின், இது கொலைகார ஆட்சி. இதனை மோடி அரசு காப்பாற்றி வருகிறது என்று குற்றம்சாட்டுகிறார்.

இந்நிலையில் கொடநாடு விவகாரத்தில் முதல்வரை தொடர்புப்படுத்திப் பேச ஸ்டாலினுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி, அதிமுக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, ஸ்டாலின் கொடநாடு விவகாரம் குறித்துப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதுகுறித்து ஏப்ரல் 3ஆம் தேதிக்குள் பதில் அளிக்க ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. ஆனால் நான் கொடநாடு விவகாரம் குறித்துப் பேசுவதை நிறுத்தமாட்டேன். என்ன தீர்ப்பு வழங்கினாலும் நீதிமன்றத்துக்கு வர தயார் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இம்மனு நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பாபு முருகவேல் தரப்பில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்சியினரின் கொள்கைகளைக் குறித்து விமர்சிக்கலாம் என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறக்கூடாது என்றும் தேர்தல் நடத்தை விதிகளில் கூறியுள்ள நிலையில், ஸ்டாலினும், திமுகவினரும் கொடநாடு விவகாரத்தில் முதல்வரை தொடர்புப்படுத்திப் பேசி வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

கொடநாடு விவகாரத்தில் முதல்வரை தொடர்புப்படுத்திப் பேச, டெல்லி பத்திரிகையாளர் உள்பட 7 பேருக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதைச் சுட்டிக்காட்டியதுடன், தேர்தல் ஆணைய விதிகளை மீறிச் செயல்படும் ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மார்ச் 22ஆம் தேதி அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புகார் அளிக்கப்பட்டது.

இதற்குத் தேர்தல் ஆணையம் சார்பில், ஸ்டாலின் கொடநாடு விவகாரம் தொடர்பாகத் திருச்சி முசிறியில் பேசினார். அந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திமுகவை சேர்ந்த சப்தரிஷி என்பவருக்குத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் கொடநாடு சம்பவம் தொடர்பாக முதல்வரை தொடர்புப்படுத்தி பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் பேச தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஸ்டாலின் பேசுவது பொய்யான அறிக்கையாகக் கருத முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *