^பிளைவுட்: ஜி.எஸ்.டி. குறைக்கப்படுமா?

public

சரக்கு மற்றும் சேவை வரியில் பிளைவுட் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள 28 சதவிகித வரி 18 சதவிகிதமாக குறைக்கப்படும் என்று அத்துறை எதிர்பார்ப்பில் உள்ளது. அடுத்ததாக நடைபெறவிருக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய பிளைவுட் மற்றும் குழு தொழிற்துறைத் தலைவரான சஜ்ஜன் பஜன்கா கூறுகையில், “வருகிற 9ஆம் தேதி ஹைதராபாத்தில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அக்கூட்டத்தில் வரிக் குறைப்பு குறைத்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். நாங்கள் தொடர்புகொண்ட அமைச்சர்கள் அனைவரும் வரிக்குறைப்புக்கு உறுதியளித்துள்ளனர். எனவே அந்த அறிவிப்பு வெளியாவதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் இந்தியாவின் ரூ.20,000 கோடி மதிப்பிலான பிளைவுட் துறையில் பிளைவுட், பிளைபோர்டு, நடுத்தர அடர்வு ஃபைபர் போர்டு போன்ற பொருள்களுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. அதை 18 சதவிகிதமாகக் குறைக்கக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பிளைவுட் துறையில் 50 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ள வடஇந்திய நிறுவனங்கள் பல வரிக்குறைப்புக்கு கோரிக்கைகள் வைத்துள்ளன. இதுபோல அதிக (28%) வரி விகிதம் இருந்தால் தங்களது நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சிறு சிறு பிளைவுட் தயாரிப்பு நிறுவனங்கள் முறையிட்டுள்ளன. எனவே 9ஆம் தேதி நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் வரிக்குறைப்பை எதிர்பார்க்கலாம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *