qஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் புது ஐடியா!

public

ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், ஜியோடேக்கிங் என்ற முறையைப் பயன்படுத்தி டெலிவரிக்கு ஆகும் செலவு மற்றும் நேரத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன்மூலம், ஆறிலிருந்து பத்து சதவிகிதக் கட்டணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று இந்நிறுவனங்கள் நம்புகின்றன.

அதென்ன ஜியோடேக்கிங்?

நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள். ஃப்ளிப்கார்ட்டில் ஒரு மொபைல் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனத்தின் தளத்தில் டெல்லி, பெங்களூரு, கர்நாடகா போன்ற நகரங்களைச் சேர்ந்தவர்கள் மொபைலைப் பட்டியலிட்டிருப்பார்கள். நீங்கள் டெல்லியில் இருக்கும் ஒருவரது மொபைலை ஆர்டர் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த மொபைல், டெல்லியிலிருந்து சென்னை வருவதற்கு ஆகும் கூடுதல் செலவு மற்றும் நேரம் ஆகும். இதுவே சென்னையில் இருக்கும் ஒருவர், அதே மொபைலை விற்பவராக இருந்தால் விரைவாக டெலிவரி செய்யமுடியும். எனவே, வாங்குபவர் மற்றும் விற்பவரை ஜியோடேக்கிங் என்ற முறையின் வழியாக எளிமைப்படுத்த இணைய வர்த்தகம் திட்டமிட்டிருக்கின்றன.

ஆனால், இந்த முறையின் காரணமாக பொருட்களை விற்பவருக்கு பாதிப்பு இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். காரணம், தற்போது விலை மற்றும் ரேட்டிங் அடிப்படையிலேயே பொருட்கள் பட்டியலிடப்படுகின்றன. இந்தப் புதிய முறையின் காரணமாக மற்ற நகரங்களில் இருந்து அதிகளவில் ஆர்டர்பெற்ற ஒருவர் இனி, குறைவாகவே பெறுவார்கள் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. உங்கள் நகரத்தில் இருப்பவர்கள் உங்களிடம்தான் வாங்கியாக வேண்டும். எனவே, விற்பனை அதிகரிக்கவே செய்யும் என்று நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எது உண்மை என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *