Jரிலாக்ஸ் டைம்: பாஸ்தா சாலட்!

public

பிள்ளைகளுக்கு பாஸ்தா பிடிக்கும்; அம்மாக்களுக்கோ பிள்ளைகளுக்குச் சத்தான காய்கறிகளும் பழங்களும்தான் கொடுக்கப் பிடிக்கும். இந்தப் பஞ்சாயத்தைத் தீர்க்க, இரண்டையும் சேர்த்து சண்டே ஸ்பெஷலாக இந்த பாஸ்தா சாலட் செய்து தரலாம்.

**எப்படிச் செய்வது?**

ஒரு பவுலில் ஆலிவ் ஆயில் அல்லது ரீஃபைண்ட் ஆயில் இரண்டு டேபிள்ஸ்பூன், லெமன் ஜூஸ் ஒரு டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், பூண்டு பவுடர் அல்லது பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு டீஸ்பூன், தேவையான அளவு கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை கலந்து வைத்துக்கொள்ளவும்.

இன்னொரு பெரிய பவுலில் வேகவைத்த பாஸ்தா ஒரு கப், பெரிய துண்டுகளாக நறுக்கிய வெள்ளரி பாதியளவு, பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் பாதியளவு, பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்று, ஆவியில் வேகவைத்த புரொக்கோலி அல்லது காலிஃப்ளவர் அரை கப், ஊறவைத்து உப்புப்போட்டு வேகவைத்த வெள்ளைநிறக் கொண்டைக்கடலை அரை கப், மாதுளை முத்துகள் இரண்டு டேபிள்ஸ்பூன், பெரிய துண்டுகளாக நறுக்கிய பேரிக்காய் அல்லது ஆப்பிள் பாதி அளவு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு கலந்து வைத்துள்ளதை ஊற்றி, இரண்டு கரண்டிகளால் கிளறி ஃபிரிட்ஜில் வைத்து ரிலாக்ஸ் டைமில் சாப்பிட்டு புத்துணர்ச்சிப் பெறுங்கள்.

**சிறப்பு**

உங்கள் வீட்டுப் பொடிசுகளை மட்டுமல்ல பெரிசுகளையும் நாக்கைச் சப்புக்கொட்ட வைக்கும் இந்த சாலட்டில் அனைத்து வகையான சத்துகளும் நிறைந்துள்ளன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *