oட்ரில் கொள்ளையன் முருகன்: த்ரில் பின்னணி!

public

திருச்சி லலிதா ஜூவல்லரி கடையின் சுவற்றில் ஓட்டைப்போட்டு உள்ளே நுழைந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்த மாஸ்டர் முருகனை, சல்லடை போட்டுத் தேடிவருகிறது திருச்சி காவல்துறை. இந்நிலையில் முருகன் யார், அவரது பின்னணி என்ன என்பது குறித்து விசாரணையில் இறங்கினோம்.

திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பு பகுதியைச் சார்ந்தவன்தான் பிரபலமான கொள்ளையன் முருகன். கடுமையான உழைப்பிற்குப் பெயர் பெற்ற ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் முருகன். கூர்மையான உளி, பாறை, சுத்தி, மண்வெட்டி போன்ற கருவிகளைக் கொண்டு மண் தோண்டுதல், கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகளைச் செய்பவர்கள் இந்த சமூகத்தினர்.

உழைப்புக்குப் பெயர் பெற்ற இந்த சமூகத்தைச் சேர்ந்த முருகன், கொள்ளையர் என்ற பட்டத்தையே பெற்றான். முருகன் சிறு வயதிலிருந்தே உறவினர்கள் நண்பர்களை மட்டும் பயன்படுத்திக்கொண்டு திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளான். சீன பொருள்கள் உதவியுடன் சின்னச் சின்ன திருட்டுகளில் இருந்து கொள்ளைக்கு ப்ரமோட் ஆகியிருக்கிறான்.

முருகன் எதில் ஸ்பெஷல்?

எப்படிப்பட்ட அகலமான சுவரையும் துளைப்போடுவதில் முருகன் ஸ்பெஷலிஸ்ட்.. இதற்காகவே ட்ரில்லிங் மிஷின் போன்ற நவீனமான மிஷின்கள், கை குளோஸ், மாஸ்க், உயர்தரமான பேக்குகள் வாங்கிவைத்துள்ளான். அதிலும் மற்ற கொள்ளையர்களை விட முருகன் ரொம்ப உஷார். இப்போது வரை முருகனை நெருங்க முடியாமல் போலீஸார் தேடிக் கொண்டே இருப்பதற்குக் காரணம், முருகனுக்கு செல்போன் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்பதுதான். செல்போன் பயன் படுத்தினால் போலீஸ் ஈசியாக கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதற்காக, போலீசார் போலவே வாக்கி டாக்கி வாங்கி, அதற்கு மதர் போர்டும் செட் பண்ணி கூட்டாளிகளுக்கு நல்ல பயிற்சியும் கொடுத்து வைத்துள்ளான் முருகன். இந்த வாக்கி டாக்கி 500 மீட்டர் தூரம் வரையில் நல்ல கம்னியூகேஷன் கிடைக்குமாம். தொழிலுக்கு வரும் ஆட்களுக்கு முருகனின் முதல் அட்வைஸ், செல்போன் பேசக்கூடாது, செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பதுதான்.

ஸ்கெட்ச் போடுவதே வேலை

முருகனிடம் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் இருக்கிறார்கள். பொலிரோ பிக்கப் போன்ற வேன்தான் பயன்படுத்துவான். முன்னால் இரண்டு பேர் உட்காரும் அளவுக்கு ஏசி வசதியுடன் இருக்கைகள் இருக்கும், பின்னால் லோடு ஏற்றுவதுபோல் இருக்கும், அதில்தான் இயந்திரங்களோடு கொள்ளையடிக்கப் பயணிப்பார்கள்.

முருகனைப் பொறுத்தவரையில் அவனது வேலை என்பது ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்து வேலையைப் பிரித்துக்கொடுப்பதுதான். வேன் ஓட்டுவதற்கு இரண்டுபேர், சுவரில் துளைகள் போடுவதற்கு இரண்டு பேர், உள்ளே நுழைவதற்கு இரண்டு பேர், ஏரியாவை கண்காணிக்க இரண்டு பேர் என கொள்ளையடிப்பதிலேயே துறை ரீதியாக வகுத்து வைத்திருக்கிறான் முருகன். .

*

மக்கள் நடமாடுமிடங்களில் குடும்பத்துடன் இருப்பதுபோல் நாடகமாடி மக்களையும், போலீஸையும் ஏமாற்றிவிட்டு, துளைப் போடும் சத்தம் கேட்காத அளவுக்கு வேனை

சரிசெய்வதுபோல் ஆக்சிலேட்டர் கொடுத்து பெரிய அளவு சத்தம் வரச் செய்வார்கள். இது ஒருவழி என்றால், பக்கத்து வீதியில் அல்லது அதே வீதியில் பழைய கட்டிடம் இடிப்பது போன்ற வேலைகள் இருந்தால் இவர்களின் ஆள்களை வேலைக்கு அனுப்பி இரவில் உடைக்கவிட்டு அந்த சத்தத்தில் கொள்ளையடிக்கப் போகும் கட்டிடத்தில் துளை போட்டுவிடுவார்கள். இவையெல்லாம் முருகனின் திருவிளையாடல்கள்.

தொழிலுக்கு ஃபைனான்ஸ் செய்யும் சேட்டுகள்

திருடும் நகைகளை வாங்குவதற்குப் பெரிய பெரிய தங்க மாளிகை கடையின் உரிமையாளர்களும் சேட்டுகளும் இருக்கிறார்கள், அவர்களிடம் மார்க்கெட் ரேட்டில் 50% சதவீதம் விலைக்கு விற்பனை செய்துவிடுவார்கள்.

கொள்ளையடிக்கப் போவதை இவர்கள் தொழிலுக்குப் போகிறோம், தொழில் இல்லை என்றுதான் சொல்வார்கள். சரியாகத் தொழில் இல்லை என்றால் முருகனுக்கு சில வியாபாரிகளும் சேட்டுகளும் அட்வான்ஸ் பணம் கொடுப்பார்கள். அந்தப் பணத்தை வாங்கி ஆட்களுக்குக் கொடுப்பார். முருகனைச் சந்திக்க வேண்டும் என்றால் அவன் இருக்குமிடம் தொழிலில் ஈடுபடுபவர்களில் ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரியும், அவர்கள்தான் நேரடியாகச் சென்று முருகனை சந்திக்க முடியும்.

முருகன் சொந்த ஊருக்கு அதிகமாக வருவதில்லை, ஊரில் நல்லது கெட்டது என்றால் ரகசியமாக வந்துவிட்டு, ’வயலுக்கு போய்விட்டு வருகிறேன், கடைவீதிக்கு போய்விட்டு வருகிறேன் ’ என்று தலைமறைவாகிவிடுவான் என்கிறார்கள் முருகனின் கூட்டாளிகள். முருகனோ அல்லது அவன் கூட்டாளிகளோ விடுதியில் தங்கமாட்டார்கள், அதிலும் குறிப்பாக சிசி கேமராக்கள் இருக்கும் இடத்தில் கவனமாக நகர்ந்து போய்விடுவார்கள்.

ஜாமர் திட்டம்

முருகன் செல்போன் பயன்படுத்த மாட்டான் என்பதை விட முக்கியமான தகவல்… முருகன், தொழிலில் ஈடுபடும்போது ஜாமர் கருவியைப் பயன்படுத்துவான். அதன் மூலம் அந்தப் பகுதியி செல்போன் அழைப்புகளைச் செயலிழக்க வைத்துவிடுவான். சமயத்தில் யாராவது தன்னை கண்டறிந்து அதை போலீஸுக்கு தெரியப்படுத்திவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு காரணமாகவே முருகன் ஜாமரை பயன்படுத்துகிறான். முருகனைப் பற்றிய இவ்வளவு தகவல்களும் நமது விசாரணையில் தெரியவந்துள்ளன.

முருகன் எங்கே?

திருச்சி சிறப்பு டீமில் உள்ளவர்கள் கண்காணிப்பில் உள்ள முருகன் கூட்டாளிகளை அடித்துக்கேட்டாலும் முருகன் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை என்கிறார்களாம். முருகன் அதிகமாகப் புழங்கும் மாநிலம் கர்நாடகா, மேற்குவங்கம், மும்பை என்று அவர்களில் சிலர் சொல்லியிருப்பதால் முருகன் தற்போது எங்கே, எந்த வேடத்தில் இருக்கிறார் என்பது தெரியாமல் மூளையைக் கசக்கி பிழிந்துக்கொண்டிருக்கிறார்கள் காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் டீம்.

சட்டம் இருந்தும் என்ன பயன்?

இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க சட்டம் இருக்கிறதா என்று கடலூர் பார் அசோசிஸன் தலைவரும் சீனியர் வழக்கறிஞருமான மாசிலாமணியிடம் கேட்டோம்.

“சட்டங்கள் இருக்கிறது. அதை அமல்படுத்துவது காவல்துறைதானே. கதவை உடைத்துக்கொண்டு, சுவரை இடித்துக்கொண்டு கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அத்துமீறி உள்ளே சென்றால் செக்‌ஷன் 457. இதற்கு 14 வருடம் தண்டனை, உள்ளே போய் திருடினால் செக்‌ஷன் 380, இதற்கு இரண்டு வருடம்தான் தண்டனை. குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்தக்கால தண்டனை கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது” என்றார்.

”வழக்குகளைப் பதிவுசெய்யும் காவல்துறையினர் நீதி மன்றத்தில் சரியான தண்டனை வாங்கி கொடுக்க தவறவிடுகிறார்கள். அதனால்தான் கொள்ளையடிப்பதே ஒரு நிறுவனமயபடுத்தப்பட்ட தொழிலாகிவிடுகிறது. பெரும்பாலும் பொய் வழக்குகள் போடுவது, சரியான செக்‌ஷன் போடுவதில்லை, ஆதாரங்களையும், சாட்சிகளையும் சரியாகச் சேகரிப்பதில்லை, அதுவும் தமிழ்நாடு போலீஸார் சிலர் பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை வழக்கிலும் பொய்யான ஆளை சேர்த்துவிடுகிறார்கள், கொலை குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு கணக்குக்கு சாராய வியபாரிகளை பிடித்து நீதி மன்றத்தில் நிறுத்துகிறார்கள். இதனால்தான் உண்மையான குற்றவாளிகளுக்குச் சரியான தண்டனை வாங்கி கொடுக்கமுடியவில்லை, குற்றங்களும் அதிகரித்துவருகிறது” என்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர்.

தான் இருக்கும் இடம் பற்றி எந்த சிக்னலும் தெரிந்துவிடக் கூடாது என்று அலைந்துகொண்டிருக்கும் முருகனை விரைவில் பிடித்துவிடுவோம் என்று வெறியோடு தேடிவருகிறார் திருச்சி மாநகர காவல்துறையின் க்ரைம் பிரிவு துணை ஆணையர் மயில்வாகனன்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *