nகுறை கூறுவது குழந்தைத்தனம்: துணைவேந்தர்!

public

‘என்னை துணைவேந்தராக நியமித்துவிட்டு தற்போது நிர்பந்தம் இருந்ததாக குறை கூறுவது குழந்தைத்தனமானது’ என்று மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தா் செல்லதுரை நேற்று ஆகஸ்ட் 3ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 27ஆம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்டார். ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்குக் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால், செல்லதுரை இதற்கு முன்பு பேராசிரியராகப் பணியாற்றிய முன் அனுபவம் இல்லாதவா். அதனால், செல்லதுரையை துணைவேந்தராக நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று அப்போதே எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளராக உள்ள, மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ் கடந்த ஜூலை 11ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழுவின் முன்னாள் கன்வீனர் பேராசிரியர் சீனிவாசன் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தற்போது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்லதுரைமீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல், துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்லதுரைக்குப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் கிடையாது. ஒருவர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியிருக்க வேண்டும். அதனால், குற்ற வழக்கு பின்னணியும் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் இல்லாத செல்லதுரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அவர் பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்களை நிரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, இந்த வழக்கில் தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தரான தமிழக ஆளுநரை எதிர் மனுதாரராக சேர்த்து மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக ஆளுநரை எதிர் மனுதாரராக சேர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக செல்லதுரை விதிமுறைகளின்படி தான் நியமிக்கப்பட்டாரா என்பதை நிரூபிக்க வேண்டும். அதனால், இந்த வழக்கில் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் பெற்ற ஆளுநர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளதால் தமிழக ஆளுநரின் செயலர், பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகியோர் காரமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்டதற்கான ஆவணங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதனிடையே, ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஹரிஷ் மேத்தா, ராமகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லதுரைக்கு போதிய அனுபவம் இல்லை என தெரிந்தே நியமித்தோம். செல்லத்துரைக்கு 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இல்லை. ஆனால், துணைவேந்தர் தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகதாஸ் நிர்பந்தத்தால் செல்லதுரையை துணைவேந்தராக நியமனம் செய்ய பரிந்துரைத்தோம். தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகதாஸின் நிர்பந்தத்தால், தேர்வுக்குழுவிலிருந்த மற்றொரு தேர்வுக்குழு உறுப்பினர் மு.ராமசாமி விலகிக்கொண்டார் என்று தெரிவித்தனர். இதையடுத்து, துணைவேந்தர் செல்லதுரை, உயர்கல்வித்துறை செயலர், துணைவேந்தர் தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை செய்தியாளா்களைச் சந்தித்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தா் செல்லதுரை கூறுகையில், “என்னை துணைவேந்தராக தோ்வு செய்ததில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. துணைவேந்தர் தேர்வில் தோ்வுக்குழுவினருக்கு நிர்பந்தம் அளிக்கப்பட்டிருந்தால் அந்த நபா் தோ்வுக்குழுவில் இருந்து வெளியேறி இருக்கலாம். என்னை தோ்வு செய்துவிட்டு தற்போது குறை கூறுவது குழந்தைத்தனமானது. எனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே இதுபோன்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *