Mமுதல்வர் ரஜினி: தமிழருவி ஆசை!

public

நடிகர் ரஜினிகாந்தை இனி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம், தமிழக முதல்வர் என்றே அழையுங்கள் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் கேவி குப்பம் பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொதுமக்கள் பூங்கா, மகாத்மா காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவை திறக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. பூங்காவை ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட் திறந்து வைத்தார். காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தத்தை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழருவி மணியன், “உண்மையாக இருப்பதும், அன்பாக இருப்பதும்தான் காந்தியம் என்றால், ரஜினிகாந்த் உண்மையான காந்தியவாதி. அவரது ரசிகர்களான நீங்களும் காந்தியவாதிகளே. முடிந்துவிட்ட வரலாறாக காந்தியத்தை நினைத்து நான் கண்ணீர் விட்டிருக்கிறேன். ஆனால் இன்று அந்த காந்தியத்துக்கு உங்களால் புத்துயிர் கிடைத்திருப்பதைப் பார்க்கிற போது நெகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

“ரஜினிகாந்தின் வாசகம் உண்மை, உழைப்பு, உயர்வு. உண்மையாக உழைத்தால் உயர்வு வரும் என்று கூறிய தமிழருவி மணியன், (ரஜினி ரசிகர்களை நோக்கி) உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து இனிமேல் சூப்பர் ஸ்டார் என்று ரஜினிகாந்தை அழைக்க வேண்டாம். அந்தக் கட்டம் முடிந்துவிட்டது. இனி நீங்கள் சொல்ல வேண்டியது தமிழகத்தின் முதல்வர் ரஜினிகாந்த் என்று” என வலியுறுத்தினார்.

திமுக, அதிமுக குறித்துப் பேசியவர், தமிழகம் நல்வாழ்வு பெற வேண்டும் என்றால் இரண்டு கழகங்களையும் முற்றாகத் தூக்கி எறிய வேண்டும். இதுதான் என் தவம். இந்தத் தவத்தை நிறைவேற்ற கடைசியில் எனக்குக் கிடைத்துள்ள நம்பிக்கைதான் ரஜினிகாந்த் என்று கூறினார். சிஸ்டம் கெட்டுவிட்டது என்றார் ரஜினி. எத்தனைப் பொருள்மிக்க, அர்த்தமிக்க வார்த்தை அது. இந்த மாநிலத்தை ஆண்ட இரு கழகங்களின் ஒட்டுமொத்த ஊழல்களையும் சீர்கேடுகளையும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார் என்றார். வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அன்பு சார்ந்த அரசியலை தமிழகத்தில் வளர்த்தெடுக்க விரும்புகிறார் ரஜினி” என்றும் தமிழருவி மணியன் கூறினார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அண்மைக் காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் தமிழருவி மணியன். இதற்காகவே திருச்சியில் பிரமாண்ட மாநாட்டையும் நடத்தினார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *