lகாஷ்மீர் விவகாரம்: தொழில் துறை வரவேற்பு!

public

370 சட்டப் பிரிவை நீக்கும் அரசின் முடிவை இந்தியத் தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான அரசியல் சாசனம் 370 பிரிவை நீக்குவதாக நேற்று (ஆகஸ்ட் 5) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இச்சட்டப்பிரிவு நீக்கப்பட்டதோடு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என்று அமித் ஷா அறிவித்தார். அதன் பின்னர் மாலையில் இந்த மசோதா மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும், தொழில் துறையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 370 சட்டப்பிரிவை நீக்குவதால் ஜம்மு காஷ்மீரில் அதிக அளவிலான முதலீடுகள் குவிவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று பி.ஹெச்.டி. வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பின் தலைவரான ராஜீவ் தல்வார் *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் இதுபற்றித் தெரிவித்திருந்ததால் பாஜகவுக்கு வாக்களித்த பெரும்பாலான மக்கள் இச்சட்டப்பிரிவை நீக்குவதற்குத் தங்களது ஆதரவைக் கட்டாயம் தெரிவிப்பார்கள் என்று ராஜீவ் தல்வார் கூறுகிறார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து ஆர்.பி.ஜி. எண்டர்பிரைசஸ் நிறுவனத் தலைவரான ஹர்ஸ் கோயன்கா, “காஷ்மீரில் எங்களுக்கு இரண்டு ஆலைகள் இருந்தன. தீவிரவாத அச்சுறுத்தலால் அவை மூடப்பட்டுவிட்டன. இப்போது 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் முதலீடுகள் மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பூமியில் சொர்க்கம் இருப்பதாக இருந்தால் அது காஷ்மீரில்தான் இருக்கும் என்று கூறுவார்கள்… அது உண்மையாகும்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 370 சட்டப்பிரிவை நீக்கும் பாஜக அரசின் முடிவைத் தான் மனதார வரவேற்பதாக ஜே.எஸ்.டபிள்யூ. குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநரான சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

மகிந்திரா & மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட தொழில் துறைத் தலைவர்களும் 370 சட்டப்பிரிவை நீக்கும் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

**

மேலும் படிக்க

**

**[தீரன் மூலம் ராமதாஸ் போடும் திட்டம்!](https://minnambalam.com/k/2019/08/06/19)**

**[டிஜிட்டல் திண்ணை: வேலூரில் எதிரொலித்த காஷ்மீர்](https://minnambalam.com/k/2019/08/05/63)**

**[காஷ்மீர் கட்சிகளின் பதவி வெறியும் ஒரு காரணம்!](https://minnambalam.com/k/2019/08/06/6)**

**[கார்ப்பரேட்டுகள் கைக்குப் போகிறதா காஷ்மீர்? – தமிழகக் குரல்!](https://minnambalam.com/k/2019/08/06/20)**

**[கோமாளி டிரெய்லர்: ரஜினி ரியாக்ஷன்!](https://minnambalam.com/k/2019/08/06/21)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *