Lஇந்திய அணியின் சாதனை வெற்றி!

public

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது.

மெல்போர்னில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியை 151 ரன்களுக்குள் இந்திய பந்துவீச்சாளர்கள் சுருட்டினர். அந்த அணி பாலோ ஆன் ஆனபோதும் இந்திய அணி பாலோ ஆன் வழங்கவில்லை. தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்களாலும் நிலைத்து நின்று ஆட முடியாத அளவுக்கு மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. 106 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸையும் டிக்ளேர் செய்தது. இதனால் 399 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தோடு இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிபெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேட் கம்மின்ஸ் நிலைத்து நின்று ஆடி இந்திய பந்துவீச்சாளர்களின் பொறுமையைச் சோதித்தார். மேலும் அணியின் எண்ணிக்கையைக் கௌரவமான அளவுக்கு உயர்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்த போது நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கம்மின்ஸ் 61 ரன்களுடனும், நாதன் லயன் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் மழை காரணமாக மதியம் உணவு இடைவேளைக்குப் பின்னரே தொடங்கியது. கம்மின்ஸ் 63 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். நாதன் லயன் 7 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 261 ரன்னில் சுருண்டது

இதனால் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெல்போர்னில் 1981ஆம் ஆண்டுக்குப் பின் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது இது முதல் முறையாகும். இதன் மூலம் இந்தியா 2-1 எனத் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி சிட்னியில் தொடங்க உள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *