Lஆதிக்கு நட்பு கை கொடுக்குமா?

public

புதிய கதைக் களத்தை கையிலெடுத்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி அதை நோக்கிய தனது பயணத்தில் வேகம் காட்டிவருகிறார்.

சினிமாவில் குறிப்பிட்ட ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்தி வருபவர்கள் சில நேரங்களில் பிற துறைகளிலும்கூட தங்களைச் சோதனை முயற்சியாக ஈடுபடுத்திப் பார்ப்பதுண்டு. அந்தச் சோதனை முயற்சி தங்களுக்கு சாதகமான முடிவைத் தரும் பட்சத்தில் அந்தப் புதிய துறையிலும் தங்களின் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள். சில நேரம் தாங்கள் முன்பு பார்த்துக் கொண்டிருந்த துறையை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு புதிய துறையிலேயே மும்முரமாக இயங்கவும் ஆரம்பித்துவிடுவார்கள்.

பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் நடிகர்களாக மாறியதும், பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறியதும், பாடகர்கள் இசையமைப்பாளர்களாக மாறியதும் இந்த வகையில்தான். இந்த லிஸ்ட்டில் இசையமைப்பாளர்களாக இருந்து நடிகர்களாக மாறுகிறவர்கள் எண்ணிக்கையும் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இசையமைப்பாளர்களாக இருந்து நடிகர்களாக மாற்றம் கண்டவர்களில் கவனிக்கத்தக்க இடங்களை தற்போது பிடித்திருப்பவர்கள், விஜய் ஆண்டனியும்,ஜி.வி.பிரகாஷ் குமாரும்.

பொதுச் சமூகம் எந்தெந்த தலைப்புகளையெல்லாம் தங்களின் படங்களுக்கு சூட்டத் தயங்குகிறதோ அந்தத் தலைப்புகளையெல்லாம் தேடி எடுத்து தனது படங்களுக்குச் சூட்டி, அவற்றில் நடித்தும் வருகிறார் விஜய் ஆண்டனி. இந்தியா-பாகிஸ்தான், சைத்தான், பிச்சைக்காரன், எமன், கொலைகாரன் , திமிரு புடிச்சவன் போன்ற படங்கள் இவர் நடிப்பில் உருவானவைதான். கணிசமான ரசிகர்களையும் தன்னகத்தே கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் இவர்.

ஜி.பி.பிரகாஷ் குமார் பக்கம் சென்றால் அவர் என்னென்ன படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் எனத் தகவல் தர விக்கிபீடியாவே திணறுகிறது. காரணம், கைவசம் சுமார் ஒரு டஸன் படங்களை வைத்துள்ளார் ஜி.வி. இவரது கணக்கைப் பார்த்தால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு வேறு எந்தப் படத்திலுமே புக் ஆகவே வேண்டாம், இருப்பதே போதும் எனக் கூறும் அளவுக்கு நிறைந்து உள்ளன படங்களின் பட்டியல். இவரும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி அதில் கவனத்தைச் செலுத்தி வருகிறார்.

இந்த இருவரைப்போலவே தற்போது களத்தில் இறங்கியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. சுயாதீன இசையமைப்பாளராக இருந்துவந்த இவர், ஆல்பம் பாடல்களில் மட்டும் தலைகாட்டிவந்தார். பின்னர் கோலிவுட்டில் இசையமைப்பாளராக மாறிய இவர் திடீரென மீசையை முறுக்கு என ஒரு படத்தை இயக்கியதுடன் கதாநாயகனாகவும் அதில் நடித்தார். கலவையான விமர்சனத்தையே அது பெற்றது. ‘தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசையை முறுக்கு’ என தனது படத்தில் கூறியதாலோ என்னவோ முதல் படம் சரியாகப் போகவில்லையென்றாலும் தற்போது தனது அடுத்த படத்திற்கு மும்முரமாக தயாராகிவிட்டார் ஆதி.

அந்தவகையில் ஹாக்கியையும், நட்பையும் மையமாகக் கொண்ட ‘நட்பே துணை’ எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இதை சுந்தர்.சியின் அவ்னி சினிமாக்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ இன்று (நவம்பர் 4) வெளியாகியுள்ளது. கேரள மேளத்தின் இசை முழக்கத்தோடு திருவிழா பின்னணியில் நடனத்துடன் என்ட்ரி கொடுக்கும் ஹிப்ஹாப் ஆதியுடன் நடிகர் ஷா ராவும் தோன்றி நடித்துள்ளார். [இதற்கு](https://www.youtube.com/watch?v=pY6LQ7qehxg&feature=youtu.be) ஆதியே இசையையும் அமைத்துள்ளார். ஹாக்கியைக் கதைக்களமாக எடுத்துள்ளதால் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *