jஉச்ச நீதிமன்றத்தில் மக்களுக்கு அனுமதி!

public

T

பொதுமக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்திற்குள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள், ஊடகத்தினர், வழக்கில் தொடர்புடையவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு நிர்வாகம் சார்ந்த சில இடங்களைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், உச்ச நீதிமன்றத்தின் வரையறைக்கு உட்பட்ட பகுதிகளைச் சனிக்கிழமைகளில் சுற்றிப் பார்க்கும் திட்டத்தை, கடந்த வியாழக்கிழமையன்று (அக்டோபர் 31) தொடங்கி வைத்தார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். இதன்மூலம், உச்ச நீதிமன்றம் இயங்கும் முறை குறித்து பொதுமக்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என்று கூறினார்.

இதன்படி, இனிமேல் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை உச்ச நீதிமன்றத்தைப் பொதுமக்கள் பார்வையிடலாம். பார்வையாளர்களுக்கு உச்ச நீதிமன்ற வரலாறு குறித்து விளக்கப்படுவதோடு, அது குறித்த குறும்படமும் திரையிடப்படும். இங்குள்ள அருங்காட்சியகத்தையும் மக்கள் பார்வையிடலாம் என்று உச்ச நீதிமன்றம் வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *