Jஅசைவ உணவு மீதான தடை நீக்கம்!

public

மும்பை ஐஐடியில் உள்ள உணவகத்தில், அசைவ உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அசைவ உணவுகளின் மீதான தடையை கல்லூரி நிர்வாகம் திரும்பப் பெற்றது.

மும்பை ஐஐடியில் மாணவர்களுக்காகப் பல்வேறு விடுதிகள் செயல்பட்டுவருகின்றன. அவ்வாறு செயல்படும் விடுதிகளில் சில ஆண்டுகளாக சைவ உணவுகள் எவர்சில்வர் தட்டிலும், அசைவ உணவுகள் பிளாஸ்டிக் ட்ரே தட்டிலும் வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் எவர்சில்வர் தட்டுக்களில் சாப்பிடுவதாகப் புகார் எழுந்ததது. இதனால், உணவு விடுதியை நிர்வகிக்கும் மாணவர் அமைப்பு, விடுதி எண் 11இல் தங்கியிருக்கும் சக மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி புதிய உத்தரவு ஒன்றை மின்னஞ்சல் மூலம் தெரிவித்தது. அதில், “அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் பிளாஸ்டிக் தட்டுக்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். சைவ மாணவர்களின் தட்டுக்களைப் பயன்படுத்துவது அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. சில மாணவர்கள் எவர்சில்வர் தட்டுக்களில் அசைவ உணவுகளை வைத்துச் சாப்பிட்டுள்ளனர். எனவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் (பிப்ரவரி 4) சிவில் இன்ஜினியரிங் துறையில் உள்ள உணவகத்தில் முட்டை, மீன், இறைச்சி ஆகிய அசைவ உணவு வகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அது தொடர்பான கடிதம் உணவகத்தின் சமையல்காரரிடம் வழங்கப்பட்டது.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் மற்றவர்களுடைய உணவு பழக்க வழக்கங்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அசைவ உணவுகளின் மீதான தடையைத் திரும்பப் பெறுவதாக கல்லூரி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *