eஜெட் ஏர்வேஸ் : புதிய ப்ரீ-பெய்டு சலுகை!

public

விமானப் பயணிகளின் மகிழ்ச்சியான விமானப் பயணத்துக்காக புதிதாக ப்ரீ-பெய்டு பாஸ் சலுகையை அறிவித்துள்ளது ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் 400 விமானங்களை இயக்கி வருகிறது. விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஜெட் ஏர்வேஸ் பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதில், புதிதாக ‘ஜெட் குளோபல் பாஸ்’ என்ற சலுகை வழங்கியுள்ளது. இதன்மூலம், ஒருமுறை பணம் செலுத்தி கூப்பன் வாங்கிக்கொண்டு 6 மாதங்கள் வரை இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இது கையேடாகவும் கிடைகிறது. ஒரு கையேட்டில் 4 கூப்பன்கள் வரை பெறலாம். இதில் பட்ஜெட்டில் பயணம் செய்வோருக்கு வரிகளை உள்ளடக்கிய விலை 52,673 ரூபாயாகவும், சொகுசாக பயணம் செய்வோருக்கு 1,19,312 ரூபாய் வரையும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ஜெட் ஏர்வேஸ் விமானம் சேவை அளிக்கும் 66 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான வழித்தடங்களுக்குப் பொருந்தும்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *