Eஅமமுக அலுவலகம் மாறுகிறதா?

public

அமமுகவில் இருந்து அதன் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா விலகியதை அடுத்து, அவரது குடும்பத்துக்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கும் அமமுகவின் தலைமை அலுவலகம் இடம் மாறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

** ஜூலை1 மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில், டிஜிட்டல் திண்ணை பகுதியில், [அமமுக தலைமை அலுவலகத்துக்கு ஆபத்து?](https://minnambalam.com/k/2019/07/01/61) என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில் இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலகுவதை முன்கூட்டியே தெரிவித்திருந்தோம்.**

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இசக்கி சுப்பையா, “அமமுக தலைமைக் கழகம் உங்களுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்குகிறதே?” என்ற கேள்விக்கு, “எனக்கு சொந்தமான கட்டிடம் என்று யார் சொன்னது. என்னுடைய நிறுவனத்திற்கு சொந்தமானது. என்னுடைய மகன்தான் அதனுடைய மேலாண் இயக்குனர். ஆனால் அவருடைய முடிவு தவறானதாக இருக்காது. ஒப்பந்த விதியின்படியே அது நடைபெறும்” என்று பதிலளித்தார்.

இசக்கி சுப்பையா சென்றபிறகு அமமுக தலைமை அலுவலகம் பற்றி அக்கட்சியின் சீனியர்களிடத்தில் விசாரித்தோம்.

** “தினகரன் தனது கட்சிக்கு அலுவலகம் தேடிக் கொண்டிருந்தபோது இசக்கி சுப்பையா அப்போது தினகரன் மீது வைத்திருந்த பிரியத்தில் இந்த பங்களாவைக் கொடுக்க முன் வந்தார். அப்போது கட்சி பதிவு செய்யப்படவில்லை. எனவே கட்டிடத்தை விலைக்கு வாங்கி கிரயம் செய்வதில் சட்ட சிக்கல் இருந்தது. எனவே லீசுக்கு கொடுப்பது என்று இரு தரப்பும் முடிவெடுத்தது. நீண்ட கால லீசுக்கு அந்த அலுவலகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (99 வருடங்கள் என்கிறார்கள்) ஆனால் இப்போதைய நிலையில் அந்த லீஸ் ஒப்பந்தம் எப்போது வேண்டுமானாலும் முறியலாம்.**

தினகரன் தனது கட்சியின் பதிவு விளம்பரத்தில் கூட இந்த முகவரியைத்தான் வெளியிட்டிருக்கிறார். இப்போது சென்டிமென்ட் ஆக இசக்கி சுப்பையாவின் முடிவை பார்க்கும் தினகரன், மீண்டும் அந்த அலுவலகத்துக்குள் நுழைய வேண்டுமா என்றும் தனது நெருக்கமான வட்டாரத்தில் கூறிவருகிறார்” என்கிறார்கள்.

**

மேலும் படிக்க

**

**[பாமகவுக்கு ராஜ்யசபா: அதிமுக பதில்!](https://minnambalam.com/k/2019/07/02/24)**

**[திட்டமிட்டே திமுகவில் இணைந்தேன்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/07/01/53)**

**[பன்னீர்செல்வம் வழக்கு: திமுகவின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்!](https://minnambalam.com/k/2019/07/02/46)**

**[தஞ்சை அமமுகவைக் குறிவைத்துக் களமிறங்கிய செந்தில்பாலாஜி](https://minnambalam.com/k/2019/06/30/17)**

**[டிஜிட்டல் திண்ணை: வைகோ- நாடாளுமன்றம் செல்ல வழிவிடுமா நீதிமன்றம்?](https://minnambalam.com/k/2019/07/02/69)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *