மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

திட்டமிட்டுதான் திமுகவில் இணைந்தேன்: தங்க தமிழ்ச்செல்வன்

திட்டமிட்டுதான் திமுகவில் இணைந்தேன்: தங்க தமிழ்ச்செல்வன்

திட்டமிட்டுதான் திமுகவில் இணைந்ததாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கடந்த 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஸ்டாலின் ஆளுமை மிக்க தலைவர்’ என்று பாராட்டியிருந்தார். மேலும், தேனியில் மிகப்பெரிய விழா எடுத்து தன்னுடைய ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கவுள்ளேன் எனவும், பலரும் அமமுகவிலிருந்து திமுகவுக்கு வருவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

திமுகவில் இணைந்த பிறகு தேனி சென்ற தங்க தமிழ்ச்செல்வனை கம்பத்தில் இன்று (ஜூலை 1) திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“நீ எடுத்தது சரியான முடிவு. நீ இருக்க வேண்டிய இடம் திமுகதான், அதுதான் வளரக் கூடிய கட்சி என்று என்னிடம் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள், வேறுகட்சியினர் கருத்து கூறினர். நான் எடுத்த முடிவு நல்ல முடிவுதான் என்று சொல்கிறார்களே தவிர யாரும் விமர்சனம் செய்யவில்லை”

என்று தெரிவித்தார்.

அமமுக என்ற ஒரு கட்சியே உருவாகியிருக்கக் கூடாது என்று தெரிவித்த தங்க தமிழ்ச்செல்வன்,

“சூழ்நிலை காரணமாக திமுகவில் இணையவில்லை. திட்டமிட்டுதான் இணைந்துள்ளேன்” என்றும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க

தஞ்சை அமமுகவைக் குறிவைத்துக் களமிறங்கிய செந்தில்பாலாஜி

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்தைத் தடுத்தேன்: கே.எஸ்.அழகிரி

ஸ்டாலினை சிபிஐ தேடிக் கொண்டிருக்கிறது: சி.வி.சண்முகம்

திமுகவை எதிர்த்தவருக்கு திமுகவிடமே ராஜ்யசபா கேட்கும் எஸ்ரா

செல்வாவின் அடுத்த படத்தில் தனுஷ்


செவ்வாய், 2 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon