dவடிவேலுவை வில்லனாகப் பார்க்க ரெடியா?

public

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவிலிருந்து சில ஆண்டுகள் விலகியிருந்தாலும் காமெடி சேனல்கள் மூலமும், மீம்ஸ்கள் மூலமும் தமிழகக் குடும்பங்களில் ஒருவராக மாறிவிட்டார். அவரது வசனங்களும் உடல்மொழியும் பல நடிகர்களின் உடல் மொழியில் மட்டுமல்ல மக்களிடையேயும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற அங்கீகாரத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் வேறு எந்த நடிகருக்கும் கொடுத்ததில்லை.

வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலின் ‘கத்திச்சண்டை’ படத்தில் நடித்திருந்தாலும் அந்த படம் நல்ல வரவேற்பைப் பெறாத நிலையில், அடுத்ததாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்தில் நடித்தார். இப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும், வடிவேலுவின் காமெடி குறிப்பிடும்படியாக இல்லை. இதைத்தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய்யின் 61-வது படத்தில் வடிவேலு தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து, ஆர்.கே-வுடன் இணைந்து `நீயும் நானும் நடுவுல பேயும்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஆர்.கே.வுக்கும் வடிவேலுவுக்கும் எதிரும் புதிருமான கதாபாத்திரம். இந்தப்படத்தில் வடிவேலு புதிய கெட்-அப்பில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தனது திறமையை வெளிப்படுத்த சவாலான கதாபாத்திரம் என்பதால் இந்த படத்தில் பழைய வடிவேலுவை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *