Bஅரசியலில் ஏஞ்சலினா ஜோலி?

public

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி ஐக்கிய நாடுகளின் சபையில் அகதிகளுக்கான தூதராகப் பணியாற்றி வருகிறார். கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் பசியால் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகிறார். அகதிகளின் குழந்தைகளுக்கான உரிமைகளுக்காகவும், பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இவ்வாறு ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல், பல சமூக நற்பணிகளையும் செய்து வரும் ஏஞ்சலினா ஜோலி பிபிசியின் டுடே ப்ரோகிராம் நிகழ்ச்சியில் நேற்று (டிசம்பர் 28) கலந்து கொண்டு உரையாடினார். அப்போது பேசிய அவர், எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறதா என்று தொகுப்பாளர் ஜஸ்டின் வெப் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஏஞ்சலினா, ”20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கேள்வியை என்னிடம் எழுப்பியிருந்தால் நான் நிச்சயம் சிரித்திருப்பேன், எனக்கான தேவை எங்கிருக்கிறதோ அங்கு நான் செல்வேன் என்று எப்போதும் சொல்வேன், ஆனால் அரசியலுக்கு நான் ஏற்றவரா என்று தெரியவில்லை.

என்னால் அரசு மற்றும் ராணுவத்துடன் சேர்ந்து பணியாற்ற முடியும் என்றால், அதைவிடப் பெரிய காரியங்களைச் சாதிக்கும் ஒரு இடத்தில் என்னால் அமர முடியும்” என்று கூறினார்.

எனினும் தற்போதைக்கு அமைதியாக இருக்க விரும்புவதாகக் குறிப்பிட்ட அவரிடம் 2020ல் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பட்டியலில் உங்களது பெயரை சேர்க்கலாமா என்ற கேள்வியை தொகுப்பாளர் முன்வைத்தார். இதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் நன்றி எனத் தெரிவித்தார் ஏஞ்சலினா.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *