_காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்: மோடி

public

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில், அகாலிதளம் – பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அம்மாநிலத்தின் ஜலந்தர் நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா பிரச்சார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியும் அகாலி தள தலைவரும், முதலமைச்சருமான பிரகாஷ்சிங் பாதலும் ஒன்றாக கலந்துகொண்டனர்.

தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: ‘காங்கிரஸ் என்பது ஒரு கடந்த கால விஷயம். அதை பஞ்சாப் மக்கள் நம்பக்கூடாது. அந்தக் கட்சி, ஒரு மூழ்கும் கப்பல். அதில் யாரும் பயணம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் கரைக்கு போய்ச் சேர முடியாது. காங்கிரஸ் கட்சி தண்ணீரைப் போன்றது. தண்ணீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் அந்தப் பாத்திரத்தின் வடிவத்தை அடைவதுபோல், காங்கிரஸும் தனது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும்.

அதுவொரு வினோதமான கட்சி. மேற்கு வங்காளத்தில் தாக்குப் பிடிப்பதற்காக இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளது. இடதுசாரிகள் கொடுத்த சீட்டுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில், சமாஜ்வாடி கட்சியை எதிர்த்து வந்தது. இப்போது அந்தக் கட்சியுடன் கூட்டு வைத்துக்கொண்டுள்ளது. இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதம்தான் காங்கிரஸின் உறுதியான குணம்.

பஞ்சாப் இளைஞர்கள்மீது போதை மருந்து குற்றச்சாட்டை சுமத்தி, சிலர் அரசியலை தரம் தாழ்த்தி வருகிறார்கள். இதன்மூலம், பஞ்சாப் மாநிலத்தின் கவுரவத்தை சீர்குலைத்து வருகிறார்கள். அவர்களுக்கு தேர்தலில் பதிலடி தாருங்கள். 70 ஆண்டுகளாக இந்த நாடு, சீரழிவு அரசியலின் விளைவுகளை அனுபவித்து வந்தது. இப்போதுதான் வளர்ச்சி அரசியலை தொடங்கியுள்ளோம்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக என்மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நான் மோடி. இந்த அராஜகத்துக்குப் பணிய மாட்டேன். ஊழலுக்கு எதிரான எனது போராட்டம், அரசியல் கலப்பு இல்லாதது. நாட்டை கருப்புப் பணத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதே எனது நோக்கம்.

ஆனால் 70 ஆண்டுகளாக சட்டவிரோதமாக சொத்துக் குவித்தவர்கள் இந்த நடவடிக்கையால் கவலையடைந்தனர். அவர்களால் இன்னும் அதை ஜீரணிக்க முடியாததால், என்னைத் தாக்கிவருகிறார்கள்’ என்று மோடி பேசினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *