9அப்பாவின் ஐபிஎஸ் ஆசை!

public

காவலர் வீர வணக்க நாளையொட்டி நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், ராஜஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் பலியான காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொளத்தூரில் உள்ள முகேஷ்குமார் என்பவரது நகைக்கடையில் மேற்கூரையைத் துளையிட்டு, மூன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் ராஜஸ்தானைச் சேர்ந்த நாதுராம், தினேஷ் சவுத்ரி, பக்தாராம் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. அவர்களைப் பிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் அடங்கிய சிறப்புப் படையினர் ராஜஸ்தானுக்குச் சென்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதியன்று பாலி மாவட்டத்திலுள்ள ஜெய்புர்க்லான் என்னுமிடத்தில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்ததில், அவர் பலியானார். ஆய்வாளர் முனிசேகர் அவரைத் தவறுதலாகச் சுட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசும் விசாரணை நடத்தியது. பெரியபாண்டியன் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்தது அரசு.

நேற்று (அக்டோபர் 21) காவலர் வீர வணக்க நாளையொட்டி, சென்னை ஆவடியிலுள்ள பெரியபாண்டியன் வீட்டுக்குச் சென்றார் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். இதில் காவல் துறை உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதன்பின், பெரியபாண்டியனின் மகன்கள் ரூபன், ராகுல் ஆகியோருக்கு லேப்டாப், சைக்கிளைப் பரிசாக வழங்கினார் ஏ.கே.விஸ்வநாதன்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் ரூபன். அப்போது, தனது தந்தையின் விருப்பப்படி ஐபிஎஸ் அதிகாரி ஆகப்போவதாகத் தெரிவித்தார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *