6ஜியோ கட்டணம் உயர்வு!

public

N

தொலைத் தொடர்புத் துறையில் இலவச சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களைக் கவர்ந்ததோடு மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு துறையையும் ஆட்டம் காண வைத்த ஜியோ நிறுவனம் தற்போது கட்டண உயர்வை அமல்படுத்தியிருக்கிறது.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ‘ஜியோ’ தொலைத்தொடர்பு சேவையில் களமிறங்கியது. அனைத்துச் சேவைகளும் இலவசம் என்ற அதிரடி அறிவிப்போடு இந்நிறுவனம் களத்தில் இறங்கியதால் மற்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை இழந்து தடுமாறின. பல கோடிகளில் மற்ற நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஜியோ இலவச சேவைகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு முடிவடைந்து கட்டணச் சேவை நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு ஒவ்வொரு மாதமும் அதிகரித்தே வந்தது. இதனையடுத்து ஜியோ நிறுவனம் தற்போது தன் கட்டண விகிதங்களை உயர்த்தியுள்ளது.

இதுவரையில் 84 நாட்களுக்கு ரூ.459க்கு வழங்கப்பட்டு வந்த சேவை, இன்று முதல் ரூ.509 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சேவையில் 84 நாட்களுக்குத் தினசரி 1 ஜி.பி 4ஜி டேட்டா, இலவச வாய்ஸ் கால், தினசரி 100 எஸ்.எம்.எஸ். ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. இந்தச் சேவைகள் புதிய கட்டண விகிதத்திலும் தொடர்கின்றன. இதற்கு முன்னர் ரூ.509க்கு வழங்கப்பட்ட சேவைகள் குறைக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.149க்கு வழங்கப்பட்டுவந்த 2 ஜி.பி. டேட்டா தற்போது 4 ஜி.பி.யாக உயர்த்தப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *